ஐடி பணிக்கு குட்பை! லட்ச ரூபாய் ஊதியத்தை விட்டுவிட்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் இளம் பொறியாளர்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒர்க் பிரம் ஹோம் மூலம் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
பெங்களூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் மாதம் லட்ச ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வந்த அவருக்கு, திடீரென அரசியல் ஆசை துளிர் விட்டிருக்கிறது.
இதையடுத்து முழு நேர அரசியலில் குதித்ததோடு தற்போது அதிமுக சார்பில் குன்னூர் 7-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் அந்த இளைஞர்.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் பல புதிய முகங்களுக்கு திமுகவும் அதிமுகவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளன. 22 வயது முதல் 25 வயதிற்குள் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் இந்த முறை அரசியல் கட்சிகள் சார்பிலும் சுயேச்சையாகவும் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஐடி பணியை துறந்துவிட்டு அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் மென் பொறியாளர் விக்னேஷ்வரன்.

பணி ராஜினாமா
குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 7-வது வார்டில் போட்டியிடுகிறார் விக்னேஷ்வரன். இவரது தந்தை அதிமுகவில் இருந்தாலும் இதுவரை எந்தவொரு முக்கியப் பதவியிலும் அமர்ந்ததில்லை. இந்நிலையில் ஒயிட் காலர் பணியான ஐடி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் என்ட்ரி கொடுத்து பலப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார் விக்னேஷ்வரன்.

பல இடங்கள்
குன்னூரை போலவே தமிழகத்தின் பல இடங்களில் இளைஞர்களையும், இளம்பெண்களையும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது அதிமுக. தஞ்சை மாவட்ட கும்பகோனத்திலும் 22 வயது இளம் பட்டதாரி பெண் ஒருவர் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். வெற்றிபெற்றாலும் கூட ஆளுங்கட்சிக்கு செல்லாத வகையில் நகர்மன்றம் மற்றும் மாநகராட்சிகளில் இவர்கள் போன்ற நபர்கள் தான் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது அதிமுக தலைமையின் கணிப்பாகும்.

கடும் போட்டி
குன்னூர் நகராட்சியை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கிய நகராட்சியாக கருதப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் வந்து செல்லக் கூடிய சுற்றுலா தலமாக குன்னூர் நகராட்சி திகழ்கிறது. இதனால் இந்த நகராட்சியை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications