வாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு
திமுக எம்எல்ஏ திராவிட மணியை நாய் விரட்டி கடித்துள்ளது
Recommended Video
கூடலூர்: வாக்கிங் சென்ற திமுக எம்எல்ஏவை.. நாய் ஒன்று பாய்ந்து கடித்து குதறி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பெயர் திராவிடமணி. இங்கு எப்போதுமே திமுகவின் பலம் சற்று அதிகமாகவே காணப்படும்.

எம்எல்ஏ திராவிட மணி, ஒரு தோட்ட தொழிலாளரின் மகன். கடந்த 20 வருடங்களாக கூடலூர் பகுதியில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வீடு பந்தலூர் எம்ஜிஆர் நகரில் இருக்கிறது.
திராவிடமணி காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி போகும்போதும், திரும்பி வரும்போதும், தொகுதி மக்களிடம் இயல்பாக பேசுவார். அப்படித்தான் இன்று காலையும் வாக்கிங் போனார். அப்போது, வரும் வழியில் ஒரு தெரு நாய் அவரை விரட்டியுள்ளது.
நாயை விரட்டி வரவும் திராவிடமணி வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளார். இதை பார்த்ததும், நாய் அவர் மீது பாய்ந்து விழுந்து கடித்தது. இதனால் அவரது தொடை, கால்களில் ரத்தம் கொட்டியது. வலியால் திராவிடமணி துடிக்கவும், இதை பார்த்து பதறிய அந்த பகுதி மக்கள், எம்எல்ஏவை உடனடியாக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகம் வலம் வருவதால், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் எம்எல்ஏவை நாய் கடித்த விவகாரம் தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications