வாழைத்தோட்டத்தில் வந்து நின்ற மலைப்பாம்பு.. நீலகிரி ஊட்டி மசினகுடி ரோட்டில் உற்று பார்த்தால்? ஓ காட்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டத்தில், சாலையோரம் படுத்திருந்த பாம்பை பார்த்து வாகன ஓட்டிகள் தெறித்து ஓடிவிட்டார்கள்.. நீலகிரி குளிருக்கு பெரும்பாலும் பாம்புகள் வராது என்பார்கள்.. ஆனால், இப்போது பெரிய மலைப்பாம்பே வந்து போய் கொண்டிருக்கிறதாம்.. நேற்றுகூட ஒரு மலைப்பாம்பு வந்து, சாலையோரத்தில் படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு சென்றிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதிகளைக் கொண்ட மாவட்டம் விளங்குகிறது. அடர்ந்த காடுகள், ஈரமான பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் பலவகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.. வனப்பகுதி என்பதால், வனவிலங்குகள் சாலைகளில் சுற்றித்திரிவது இயல்பான விஷயமாகிவிட்டது..

நீலகிரியில் பாம்புகள்
இப்படி வனப்பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வந்தாலும், விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் பாம்புகள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
நீலகிரி குளிருக்கு பாம்புகள் தங்குவதில்லையாம்..
ஆனால், மாயாறு, மசினகுடி போன்ற பகுதிகளிலும் குஞ்சபனை மற்றும் பரலியார் போன்ற வனப்பகுதிகளில் மட்டுமே இதமான காலநிலையில் பாம்புகள் தென்படுவதாகத் கூறுகிறார்கள்.. குறிப்பாக, நீலகிரி பொந்து பாம்பு, நீலகிரி ஓலைப்பாம்பு, திமில்மூக்கு குழிவிரியன் பாம்பு, குதிரை லாடக்குழி விரியன் போன்ற பாம்புகள் உள்ளதாகவும், இதில், பொந்து பாம்பு, ஓலைப்பாம்பு தவிர, மற்ற இரு வகையான பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாம்.
மலைப்பாம்பு வந்துவிட்டது
இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், நாகப்பாம்பு, மிகப்பெரி மலைப்பாம்புகளும் உண்டு என்றும் சொல்வார்கள்.. ஆனால், சமீப காலமாகவே பாம்புகளின் நடமாட்டம் நீலகிரியில் அதிகரித்துள்ளன..
நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டம் கல்லட்டி சாலையில் ஒரு பெரிய பாம்பு சாலையின் நடுவே கடந்து சென்றுள்ளது.. திடீரென பாம்பு குறுக்கே போகவும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டார்கள்.. சிலர் அங்கிருந்து பாதுகாப்பாக நகர்ந்து தொலைவில் சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்த பாம்பு, மெல்ல சாலையை கடந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது.. கல்லட்டி சாலை காட்டுப்பகுதிக்கு அருகில் இருப்பதால், இங்கு விலங்குகள் , பாம்புகள் சாலை வழியாக செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்..
ஊட்டி டூ மசினகுடி ரோட்டில் ரெஸ்ட்
இந்த அதிர்ச்சி விலகாத நிலையில், இன்னொரு சம்பவம் நீலகிரியில் நேற்றிரவு நடந்துள்ளது.. சுமார் 7 மணி அளவில் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் வாழைத்தோட்டம் கிராமம் அருகே மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது..
நீண்ட நேரமாக சாலையோரத்திலேயே படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தது.. அந்த வழியாக ஏதாவது வாகனங்கள் வந்தால், திடீரென எழுந்து நின்று ஒய்யாரமாக போஸ் கொடுத்தது.. சாலையை கடந்து பாம்பு சென்றுவிடும் என்று நினைத்தால், நீண்ட நேரத்துக்கு சாலையோரத்தில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்து விட்டது.. அதற்கு பிறகுதான் மெல்ல நகர்ந்து சென்றிருக்கிறது..
இப்போதெல்லாம் அதிக அளவு மலைப்பாம்புகள் இந்த பகுதியில் தென்படுவதாகவும், எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications