தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி வருகை.. 4 நாட்கள் முகாமிடுகிறார்... என்ன காரணம்?
ஊட்டி: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று ஊட்டிக்கு வருகிறார். சென்னையில் காலையில் விமானம் மூலம் புறப்படும் அவர் மதியம் கோவை விமான நிலையத்திறகு சென்றடைகிறார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே நீட் தேர்வு, 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மோதல் போக்கு இருந்து வந்தது. இரு தரப்பு அவ்வப்போது ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு தொடங்கியது. வளர்ந்து வரும் புதிய உலக அரங்கில் இந்தியாவின் பங்கு , 2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும் ஆகிய இரு தலைப்புகளின் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாநாடு
இந்த மாநாட்டை துவங்கி வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி மிகவும் காட்டமாக பேசியிருந்தார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது என விமர்சனம் செய்திருந்தார். அவ்வப்போது ஊட்டியில் நடந்த விழாக்களில் பங்கேற்று வந்தார்.

ஊட்டி பயணம்
இந்த நிலையில் ஒரு முறை ஊட்டி பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லியில் அமைச்சர் அமித்ஷாவை பார்ப்பதற்காக அவசர அவசரமாக சென்றிருந்தார். அங்கு தமிழக அரசுக்கும் ஆர் என் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

தமிழக ஆளுநர்
தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் புறப்படும் அவர், மதியம் கோவை விமான நிலையத்திற்கு சென்றடைகிறார். பின்னர் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு மாலை 5.30 மணிக்கு செல்கிறார்.

எந்த நிகழ்ச்சியும் இல்லை
அதன்பின்னர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். வருகிற 9-ஆம் தேதி வரை ஊட்டியில் கவர்னர் இருக்கிறார். ஆனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 9-ம் தேதி காலையில் ஊட்டியில் இருந்து புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications