தொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது.. அமைச்சர் வன்னியரசு பளீச்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளைகளைத் தடுப்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல அது நமது பொறுப்பும் தான் என்றும், தொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் சமுக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தலைவர் விஜய் தீவிரமாக பொதுமக்களிடம் முன்வைத்தார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.

vanniyarasu-says-continuous-murders-cannot-be-justified

தொடர் கொலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் ரவுடி தீபாத் என்ற நபரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மாநிலத்தில் நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளைகளை தடுப்பதும், பாதுகாப்பதும் காவல் துறையின் பொறுப்பு மட்டுமல்ல, அது நமது பொறுப்பும் தான் என்று சமுக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

பதற்றத்தை உருவாக்க முயற்சி

இதுகுறித்து, நீலகிரியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னியரசு கூறியதாவது: ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அந்த ஆட்சியில் நடந்தது, இந்த ஆட்சியில் நடந்தது என்பதில்லை. விடுதலைச் சிறுத்தைகளைப் பொருத்தவரை அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறோம். ஆணவப் படுகொலை நடந்தால் நாங்கள் களத்திற்குச் செல்கிறோம். அதனை யாரும் உயிராக பார்ப்பதில்லை.

அதனை யாரும் பொருட்படுத்துவது இல்லை, அதனை சட்டம் ஒழுங்காகப் பார்ப்பதில்லை. ஆனால், அரசியலுக்காக இத்தனை கொலைகள் நடந்துள்ளதாக கணக்கு கூறுகிறார்கள். அதனை சொல்லி பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். சமூக பதற்றம் தவிர்க்கப்பட வேண்டியது முக்கியமானது.

கொலைகளை நியாயப்படுத்த முடியாது

காவல் துறையினர் தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையைக கூட கொண்டாடுவதில்லை. தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும். அதனை மீறி நடக்கிறதென்றால் கூடுதல் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மக்களுக்காக, அவர்களுடைய பாதுகாப்புக்காகத்தான் காவல் துறை உள்ளது. இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 24 மணி நேரமும் காவல் துறையினர் பணியாற்றுகின்றனர். எல்லா உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. காவல் துறைக்கு மட்டுமல்ல நமக்கும் அந்த பொறுப்பு உள்ளது. பதற்றத்தின் மூலம் படுகொலைகளை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+