ஊட்டியில் திகில்.. காயமே இல்லாமல் இறந்து கிடந்த 2 புலிகள்! மரணத்தில் நீடிக்கும் மர்மம் - என்னாச்சு?
நீலகிரி: ஊட்டியில் 2 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் இது குறித்து விளக்கம் கொடுத்து உள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை தெற்கு சரகத்திற்கு உட்பட்ட அவலாஞ்சி அணையின் உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் பணியாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நீலகிரி மாவட்ட வன அலுவலர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இரண்டுமே பெண் புலிகள் என்பது தெரியவந்தது.

ஒரு புலி வாய்க்காலிலும், மற்றொரு புலி வாய்க்காலின் மேல் கரையிலும் இறந்து கிடந்தது. ஆனால் அந்த 2 புலிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என்பதால் அவற்றின் மரணத்தில் மர்மம் நீடித்தது. விஷ ஊசி ஏற்றி புலிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் விளக்கம் அளித்து உள்ளார்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "9.9.2023 அன்று மாலை 4.30 மணியளவில் அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் பணியாளர்கள் தெரிவித்தனர். உடனடியாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவரது தகவலின்படி, இரண்டும் பெண் புலிகள். வாய்க்காலில் ஒன்று இறந்து கிடக்கிறது. மற்றொன்று வாய்க்காலின் மேல் கரையில் உள்ளது. இரண்டு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம்.
திரு. தேவராஜ் IFS, ACF (HQ) தலைமையில் 20 பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை தணிக்கை செய்து வருகிறது. இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாமோ என களத்தில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிதலின் படி இன்று 10.9.2023 காலை பிரேத பரிசோதனை செய்யப்படும். மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இரண்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது, மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் என தெரிவிக்கப்படும்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications