கொட்டும் பனி.. வெண்பனி போர்வையில் ஊட்டி! 0.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் பதிவு
நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் பரவலாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், ஊட்டியில் குறைந்தபட்சமாக 0.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையுடன் பருவமழை முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் மாநிலம் முழுவதும் பரவலாக வறண்ட வானிலைதான் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் உறைபனி குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், உதகையில் 0.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

உதகையில் வழக்கமாக ஆண்டு தோறும், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி நிலவும். இந்த ஆண்டு உறைபனி லேட்டாக தொடங்கினாலும், தீவிரமாக நிலவி வருகிறது. தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் புற்கள் வெண்பனியால் போர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகாலை வேலையில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மட்டுமல்லாது தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவற்றில் உள்ள தாவரங்கள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டிருக்கின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதாலும், பகல் நேரங்களில் அதிக வெப்பம் இருப்பதாலும் தாவரங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உதகையில் தற்போது 0.3 டிகிரி குளிர் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதே நிலைமை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே நீலகிரி மக்கள் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications