கொடுமை! வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் காட்டு யானை! ஷாக் ஆகிப் போன சுற்றுலாப் பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி முதுமலை புலிகள் காப்பக சாலையில், சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் வீசிசென்ற பிளாஸ்டிக் பையை, உணவென நினைத்து காட்டு யானை சாப்பிட்டுள்ளது. இந்த கொடுமையான காட்சி வெளியாகி, வன ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி, அடர்ந்த வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள இயற்கைச் சூழலையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மதிப்பதுமில்லை, அதிகாரிகள் கண்காணிப்பதும் இல்லை

சுற்றுலாப் பயணிகள் அலட்சியம்

சுற்றுலாப் பயணிகள் அலட்சியம்

எனினும், அரசின் அறிவிப்பை காற்றில் பறக்க விட்டுவிட்டு, இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மறைமுகமாக பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகளிலும், வனப்பகுதிகளிலும் தூக்கிவீசி விட்டு செல்கின்றனர். 6 அறிவு மனிதர்கள் அஜாக்கிரதையாக செய்யும் இதுபோன்ற செயல்களால், ஏதும் அறியாத ஐந்தறிவு வாயில்லா ஜீவன்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக்கை உண்ட யானை

பிளாஸ்டிக்கை உண்ட யானை

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி - தெப்பக்காடு சாலை பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர், தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை, வனப்பகுதிக்குள் வீசி விட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறு வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, காட்டு யானை ஒன்று, உணவென நினைத்து, தும்பிக்கையால் ஆர்வமுடன் எடுத்து உண்டுள்ளது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவி, வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்குகள் பலியாகும் அபாயம்

வனவிலங்குகள் பலியாகும் அபாயம்

வனப்பகுதிக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகளிலும், வனப்பகுதிகளிலும் தூக்கி வீசி விட்டு செல்லும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால், பிளாஸ்டிக் கழிவுகளை உணவு என சில வன விலங்குகள் உட்கொள்கின்றன. இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை தெரியாமல் உண்ணும் அத்தகைய வனவிலங்குகள், சிறிது காலத்தில், வயிறு கோளாறு ஏற்பட்டு, பரிதாபமாக இறந்துவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள்

சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள்

இயற்கை சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகள், இதுபோன்ற தவறுகளை இனியும் செய்யாமல், பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இனியாவது சுற்றுலாப் பயணிகள் இதனை கடைப்பிடிப்பார்களா? அவர்களுக்கே வெளிச்சம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+