என்னை தாண்டி போய்டுவீங்களா.. பஸ்சை வழிமறித்த யானை.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த பயணிகள்!
Recommended Video
நீலகிரி: நீலகிாி மாவட்டம் மஞ்சூா் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். மேலும் வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிாி மாவட்டம் மஞ்சூாிலிருந்து கோவைக்கு செல்லும் மலைபாதையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து வருகின்றன.

இந்நிலையில் கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை பெரும்பள்ளம் என்ற இடத்தில் காட்டுயானை ஒன்று சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தது. யானையை கண்டவுடன் ஒட்டுநா், பேருந்தை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.
இதேபோல் மஞ்சூாிலிருந்து கோவைக்கு சென்ற வாகனங்களும் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.
இதனால் பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். பஸ்சுக்குள் இருந்தபடியே யானையை வீடியோ எடுப்பதும், அது எப்படா இடத்தைக் காலிச் செய்யும் என்றும் பயணிகள் காத்துக் கிடந்தனர். நீண்ட நேர விளையாட்டுக்குப் பின்னா் யானை மெதுவாக நடந்துசென்று காட்டுப் பகுதிக்குள் போனது. அதன் பிறகே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
தற்போது காட்டுயானைகள் அதிகளவில் வனப்பகுதியை விட்டு சாலைகளில் வருவதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், யாரும் வாகனங்களைவிட்டு கீழே இறங்கி புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications