Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண கொண்டாட்டம்.. ஊட்டியில் "டெண்ட்" அடித்த ஆளுநர் ரவி.. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பா? - பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி ஊட்டிக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு விஷயங்களுக்காக இந்த பயணம் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஊட்டிக்கு சென்றார். 7 நாள் பயணமாக ஆளுநர் ஆர். என் ரவி ஊட்டிக்கு சென்றுள்ளார்.

ஆளுனர் ரவியின் உறவினர்கள், அவரின் மனைவி, 2 மகள்கள், 1 மகன் எல்லோரும் ஊட்டிக்கு சென்றுள்ளனர். இந்த வாரம் ஊட்டியில் ஆளுநர் ஆர். என் ரவியின் மகள் திருமணம் நடக்க உள்ளது.

ஊட்டி

ஊட்டி

ஊட்டியில் இருக்கும் ராஜ்பவனில் இந்த திருமண விழா நடக்க இருக்கிறது. கடந்த மாதமே ஆளுநர் ஒருமுறை இப்படி ஊட்டி சென்று இருந்தார். அப்போதே இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவர் ஊட்டியில் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. எளிமையான வகையில் ஆர்ப்பாட்டம் இன்றி இந்த திருமணம் நடக்க உள்ளது.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இந்த நிலையில் ஆளுநர் ரவியின் மகள் திருமணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை முதல்வர் தரப்பிற்கு அதிகாரபூர்வ அழைப்பு செல்லவில்லை. இது குடும்ப நிகழ்வு என்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஆளுநர் அரசியல் தலைவர்கள் யாரையும் அழைக்காமல் உறவினர்களை மட்டும் வைத்தும் கூட திருமணம் நடத்த வாய்ப்புகள் உள்ளன.

ஸ்டாலின்

ஸ்டாலின்


ஆனால் மாநிலத்தின் முதல்வர் என்ற வகையில் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பதே மரியாதையாக இருக்கும். ஆளுநர் - முதல்வர் இடையே மோதல் இருக்கும் போதும் கூட பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. நீட் மோதலுக்கு இடையேதான் குடியரசுத் தின விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் தோன்றினார்கள்.

நீட் விவகாரம்

நீட் விவகாரம்

அதேபோல் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவரும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் இதில் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மாறி மாறி வணக்கம் வைத்துக்கொண்டனர். நீட் விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இருவருக்கும் மோதல் நிலவி வருகிறது.

ஆளுநர் - முதல்வர்

ஆளுநர் - முதல்வர்

அதிலும் ஆளுநர்களுக்கு எதிரான பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் ரவி தனது மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினை அழைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஸ்டாலின் திருமணத்திற்கு செல்லும் பட்சத்தில் ஆளுநர் - முதல்வர் இடையிலான மோதல் கொஞ்சம் சரியாக வாய்ப்புள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவர்களை ஆளுநர் அழைப்பாரா, மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு இவர் நெருக்கம் என்பதால் தேசிய தலைவர்களுக்கு இந்த அழைப்பு செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+