திடீர்னு வெளியான பழைய வீடியோ.. மிரண்டு போன இளைஞர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே..!
குன்னூரில் சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் கைதானார்
ஊட்டி: என்னைக்கோ எடுத்த வீடியோ இன்னைக்கு வந்து தலைவலியாக மாறும் என்று அந்த இளைஞர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. கடைசியில் போலீஸார் அவரை தட்டி தூக்கிவிட்டார்கள்.
கடந்த 4 நாட்களாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.. அது குன்னூரில் ஒரு கோயிலில் எடுக்கப்பட்ட வீடியோ..
ஸ்கூல் யூனிபார்மில் மாணவி உள்ளார்.. அவருக்கு ஒரு இளைஞர் தாலி கட்டுகிறார்.. இது கட்டாய கல்யாணம் போல தெரியவில்லை.. இளைஞர் தாலி கட்டும்போது, அந்த பெண் சிரித்து கொண்டே, கழுத்தில் குனிந்து தாலியை வாங்கி கொள்கிறார்.

வீடியோ
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ண தொடங்கியது.. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்தனர்.. இந்த கோயில் குன்னூர் கோயில் என்பது மட்டும் தெரியவந்ததால், போலீசாருக்கு புகார்களும் செல்ல ஆரம்பித்தன. குன்னூர் சி - 1 போலீசார், இது சம்பந்தமான விசாரணையை துவங்கினர். அந்த இளைஞர் பெயர் கவுதம்.. சட்டன் என்ற பகுதியை சேர்ந்தவர்.

பள்ளி மாணவி
இவரும், அந்த பள்ளி மாணவியும் காதலித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. பின்னர், சம்பந்தப்பட்ட சிறுமியையும் கவுதமையும் அழைத்து நேரில் விசாரித்தனர்.. அப்போதுதான் இது பழைய வீடியோ என்பதே தெரியவந்தது.. கடந்த வருடம் பிப்ரவரியில் எடுத்திருக்கிறார்கள்.

கல்யாணம்
வீட்டில் முறைப்படி பெண் கேட்டால், தர மாட்டார்கள் என்று முடிவுசெய்து, சிறுமியை கோயிலுக்கு வரவழைத்து தாலி கட்டி உள்ளார் கவுதம்.. இந்த காட்சியை உடனிருந்த நண்பர்களை வைத்து வீடியோவும் எடுக்க சொல்லி உள்ளார்.. பிறகு, இந்த வீடியோவை சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி தங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க கவுதம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

கைது
ஆனால், இவ்வளவு நாள் கழித்து இந்த வீடியோ எப்படி வெளியானது என்று கவுதம் தரப்புக்கும் தெரியாதாம். எனினும், ஒரு பள்ளி மாணவிக்கு தாலி கட்டியதால், குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் கவுதம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications