Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய புரட்சி.. நிப்பான் நிறுவனம் வெளியிட்ட மேட்டெக்ஸ் ஈ-இசட் வாஷ் பெயிண்ட்..என்ன சிறப்பு தெரியுமா?

புதிய கழுவும் திறன் மற்றும் வசதிகளை கொண்ட மேட்டெக்ஸ் ஈ-இசட் வாஷ் பெயிண்டை (MATEX EZ Wash Paint) நிப்பான் பெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: புதிய கழுவும் திறன் மற்றும் வசதிகளை கொண்ட மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்டை (MATEX EZ Wash Paint) நிப்பான் பெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆசியாவில் மிகப்பெரிய பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடட் நிறுவனம் இன்று மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்டை (MATEX EZ Wash Paint) அறிமுகம் செய்துள்ளது. வீட்டின் உட்புறத்தில் சுவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள், அடிக்கடி கழுவ வேண்டிய பொருட்கள் ஆகியவற்றில் அடிக்க கூடிய உட்பக்க எமல்சன் வகை பெயிண்ட் ஆகும் இந்த மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்ட் (MATEX EZ Wash Paint) .

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று நல்ல கழுவும் திறன் மற்றும் வசதிகளை கொண்ட பெயிண்டாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்ட் (MATEX EZ Wash Paint) மூன்று வருடங்களுக்கு நிலைத்து இருக்கும். ஒரு சுவரை 1000 முறை ஸ்க்ரப் செய்து கழுவினாலும் இது நிலைத்து நிற்கும். அதேபோல் மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்ட் (MATEX EZ Wash Paint)ல் நல்ல நறுமணம் இருக்கும், அதேபோல் இது ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

Nippon Paint launches MATEX EZ Wash, a new age emulsion offering best Washability

இந்த வித்தியாசமான பெயிண்ட் இன்று காலை நிப்பான் பெயிண்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடட் (Decorative Division) நிறுவனத்தின் தலைவர் எஸ். மகேஷ், மார்க்கெட்டிங் இயக்குனர் மார்க் டைட்டஸ் (Decorative Division), ஆகியோர் மூலம் வெளியிடப்பட்டது. ஹோட்டல் கிரீன் பார்க்கில் இந்த விழா நடந்தது. பல வருடம் ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் மூலம் நிப்பான் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு இதை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த பெயிண்டின் சிறப்பம்சம் குறித்து பேசிய நிப்பான் பெயிண்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடட் (Decorative Division) நிறுவனத்தின் தலைவர் எஸ். மகேஷ், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் எப்போது பெயிண்ட் துறையில் புதிய புரட்சியை செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறது. தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான சேவை காரணமாக புரட்சியை செய்துள்ளது.

அந்த வகையில் இந்த மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்டை (MATEX EZ Wash Paint) நல்ல கழுவும் திறன் மற்றும் புதிய வசதிகளை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும். எளிதாக இதை கழுவ முடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். மேட்டெக்ஸ் ஈஇசட் வாஷ் பெயிண்ட் (MATEX EZ Wash Paint) பல வருட ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு பின் உருவாக்கப்பட்டு உள்ளது.

இது குறைந்த விலையில், நிறைய ஆபர்களுடன் கிடைப்பதால் மார்க்கெட்டில் மக்கள் அதிகமாக விரும்பி வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன், என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்க.

நிப்பான் பெயிண்ட் குறித்து:

நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ஜப்பானில் 139 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. இத்தனை வருட அனுபவத்துடன் ஆசியாவில் மிகப்பெரிய பெயிண்ட் நிறுவனமாகவும், நிறைய தொழிற்சாலைகளை கொண்ட நிறுவனமாகவும் நிப்பான் பெயிண்ட் திகழ்ந்து வருகிறது. நிப்பான் பெயிண்ட் நிறுவனம் உயர் தரமான பெயிண்ட்களை அலங்காரம், தொழிற்சாலை மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்காக உருவாக்கி வருகிறது.

இத்தனை வருடங்களில் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் தங்கள் பெயிண்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி உள்ளது, நிறைய மாற்றங்களை செய்துள்ளது, அதேபோல் இயற்கைக்கு ஏற்றபடி நிறைய மாற்றங்களை செய்துள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, இயற்கை பாதுகாப்பையும் இது கருத்தில் கொண்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம் மூலம் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. மொத்தமாக நிப்பான் பெயிண்ட் நிறுவனமும் 31 நாடுகளில் உலகம் முழுக்க பரவி இருக்கிறது. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜெர்மனி, கிரீஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் பரவி இருக்கிறது.

இது தொடர்பாக கூடுதல் விபரத்தை தெரிந்து கொள்ள பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளவும்,

டிசெரிங்டோல்மா - 9940010803; முகமது சுலைமான் - 9710055505

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+