வகுப்பறையில் கட்டிப்பிடித்து அத்துமீறல்.. லிப் டூ லிப் வேற.. முகம் சுளிக்க வைத்த மாணவர்கள்.. வீடியோ
நொய்டா: வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர் - மாணவி ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பள்ளிக்கூட வகுப்பறையில் இப்படியா அநாகரீக செயலில் ஈடுபடுவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கூட வகுப்பறையில் ஒரே பெஞ்சில் அமர்ந்து கொண்டு மாணவரும் மாணவியும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கிளாஸ் ரூமில் மாணவர்கள் அனைவரும் இருக்கும் போதே இரண்டு பேரும் முத்தம் கொடுத்துக்கொண்டு முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபடுகிறார்கள். சக மாணவ மாணவிகள் அருகில் இருக்கிறார்கள் என்பதை கூட கண்டுகொள்ளாமல், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கின்றனர்.

இதனை சக மாணவர் யாரோ ஒருவர் தனது செல்போனில் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பிட்ட இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் எங்கு என்பது தெரியவில்லை. அதேபோல இந்த சம்பவம் பள்ளியில் நடைபெற்றதா? அல்லது கல்லூரியில் நடைபெற்றதா? என்ற விவரமும் தெரியவில்லை.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ, பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் நடத்தைகளில் பள்ளி நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பெற்றோர்கள், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும், இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு, மாணவ மாணவிகளின் எதிர்காலம் சீர்கெடாமல் இருக்க இத்தகைய சம்பங்களை உடனே கண்காணித்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் நொய்டவில் இந்த அநாகரிக சம்பவம் நடைபெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். எனினும், நொய்டாவில் எந்த கல்வி நிலையத்தில் நடைபெற்றது என்பது குறித்த விவரம் எதையும் பதிவிடவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவி ஒருவருடன் மாணவர் கல்லூரி வளாகத்திற்குள் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவிற்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி தெரிவித்ததோடு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில்தான் மீண்டும் அத்தகைய ஒரு வீடியோ இணையத்தில் பரவி பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு.. இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் ஒழுக்கத்துடன் மாணவர்கள் இருக்க உரிய அறிவுரைகளை ஆசிரியர்களும் அளிக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications