ஆபீஸ் வாட்ஸ்அப் குரூப்பில் ‘ஆபாச படம்’.. முகம்சுளித்த பெண் அதிகாரிகள்.. கலெக்டர் அதிரடி.. சதி வலையா?
கந்த்வா : மத்திய பிரதேச மாநிலத்தில் கலால் துறை அதிகாரி ஒருவர் அலுவலக வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த பெண் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததை அடுத்து கலால் துறை அதிகாரி அஹிர்வார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தான் அந்த வீடியோவை பகிரவில்லை என்றும் போனை வைத்துவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றபோது யாரோ வீடியோவைப் பகிர்ந்துவிட்டார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் கலால் வரித் துறை உதவி மாவட்ட கலால் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஹிர்வார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் இடம்பெற்றிருக்கும் அலுவலக வாட்ஸ்அப் குழுவில் கடந்த மே 23ஆம் தேதி ஆபாச வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அஹிர்வார். 24 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீடியோவை அஹிர்கார் டெலிட் செய்யாமல் இருந்துள்ளார்.

அதிரடி சஸ்பெண்ட்
இதனால் அதிர்ந்து போன பெண் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். இதையடுத்து கலால் துறை உதவி மாவட்ட கலால் அதிகாரி அஹிர்வார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஹிர்காரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

வீடியோ அழிக்கப்பட்டது
அலுவலக வாட்ஸ் அப் குழுவில் திடீரென அஹிர்கார் ஆபாச வீடியோவை பகிர்ந்தது பற்றி பெண் அதிகாரிகள் புகார் தெரிவித்ததாகவும், இதையடுத்து அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ டெலிட் செய்யப்பட்டதாக மாவட்ட கலால் அதிகாரி விகாஸ் மாண்ட்லோய் தெரிவித்துள்ளார்.

சதி வலை?
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட கலால் அதிகாரி அஹிர்வார், தான் ஒரு சதி வலையில் சிக்கவைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். தான் வீடியோவை பகிரவில்லை என்றும், தான்அலுவலகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றபோது, யாரோ ஒருவர் தனது செல்போனை எடுத்து ஆபாச வீடியோவை வேண்டுமென்றே பகிர்ந்து தன்னைச் சிக்க வைத்துள்ளார் என்றும் அஹிர்வார் குற்றம்சாட்டியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications