ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.. திருப்பதி கோவில் இணையதளத்தில் அதிரடி மாற்றம்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கலியுக தெய்வமாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். நவராத்திரி பிரம்மோற்சவம் தற்போது நடைபெறுவதால் ஏழுமலையான் கோவில் பூலோக வைகுண்டம் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றைய தினம் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் உலா வந்தால் மலையப்பசுவாமி. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் இணைய தள பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
One Organisation, One Website, and One Mobile App' திட்டத்தின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இணையதளமான http:// tirupatibalaji.ap.gov.in.... http:// ttdevasthanams.ap.gov.in-க்கு மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், ஆன்லைனில் முன்பதிவு செய்ய http:// ttdevasthanams.ap.gov.in இணையதளத்தைப் பயன்படுத்துமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையானை வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இம் மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை,அஷ்டதல பாத பத்மாராதனை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கள் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி 20 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குழுக்களில் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. தொடர்ந்து குலுக்கல் மூலம் டிக்கெட் கிடைக்கப்பெற்ற பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை பெற்று கொள்ள வேண்டும்.

அதேபோல் ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை இம்மாதம் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்யலாம்.
ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளை ஆன்லைனில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 21ஆம் தேதி 3 மணிக்கு துவங்கி டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி மாதம் ஏழுமலையானை வழிபட விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இம்மாதம் 23ஆம் தேதி மாலை 3 மணி முதல் டோக்கன்களை ஆன்லைன் மூலம் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதே போல் தேவஸ்தானத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து தலா 500 ரூபாய் கட்டணத்தில் ஸ்ரீ வாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் இம்மாதம் 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி மாதம் ஏழுமலையான வழிபட விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இம்மாதம் 23ஆம் தேதி மாலை 3 மணி முதல் டோக்கன்களை ஆன்லைன் மூலம் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி திருமலை ஆகிய ஊர்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் அறைகளில் ஜனவரி மாதம் தங்க விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் அவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
டிசம்பர் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் தன்னார்வலர்களாக சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கும், டிசம்பர் மாதம் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் சேவையாற்ற விரும்பும் பக்தர்கள் மதியம் 12 மணிக்கும், உண்டியல் பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் டிசம்பர் மாதம் சேவையாற்ற விரும்பும் பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு தங்கள் பெயர்களை தேவஸ்தான இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications