For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. நினைவுதின மவுன ஊர்வலத்தில் சிரித்துக் கொண்டே எடப்பாடியாரை முந்தி ஓடும் ஓபிஎஸ்!

ஜெ. நினைவுதின மவுன ஊர்வலத்தில் சிரித்துக் கொண்டே எடப்பாடியாரை முந்தி செல்லும் ஓபிஎஸ் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. நினைவுதின மவுன ஊர்வலத்தில் சிரித்துக் கொண்டே எடப்பாடியாரை முந்தி ஓடும் ஓபிஎஸ்!- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அதிமுவினர் நடத்திய மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், சிரித்துக் கொண்டே முதல்வரை முந்தி செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுதான் துக்கமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஜெயலலிதாவுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்களும், அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை துக்க தினமாக அனுசரித்து முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

     அமைதி பேரணி

    அமைதி பேரணி

    அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி வாலாஜா சாலை வழியாக மெரினாவை வந்தடைந்தது.

     சிரித்துக் கொண்டே...

    சிரித்துக் கொண்டே...

    இந்த பேரணியின் போது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் என ஊர்வலமாக வந்தனர். அப்போது முதல்வர் எடப்பாடியுடன் வந்த ஓபிஎஸ் திடீரென ஒரு கட்டத்தில் சிரித்துக் கொண்டே முந்திக் கொண்டு ஓடினார்.

    தொண்டர்கள் வேதனை

    இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதை காணும் நெட்டிசன்கள் இதுதான் துக்கம் அனுசரிப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் இறப்பால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறும் அதிமுகவினர் இதுபோல் சிரித்து கொண்டே துக்கம் அனுசரிப்பது உண்மையான தொண்டர்களுக்கு வேதனை அளிக்கிறது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஜெயலலிதா மறைந்த போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது பெரும்பாலான மூத்த ஆண், பெண் நிர்வாகிகள் சிரித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வமோ சோகமே உருவாய் காட்சியளித்தார். அதிமுக பிளவுப்பட்டபோது ஓபிஎஸ்ஸை ஆதரித்த நெட்டிசன்கள் எடப்பாடி அணியில் சிரித்துக் கொண்டிருந்தவர்களின் போட்டோக்களையும் ஓபிஎஸ்ஸின் சோக புகைப்படத்தையும் போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Today Jayalalitha's first death anniversary. OPS-EPS and other ADMK activists held silent rally. At that time, OPS overtakes Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X