ஓமிக்ரானை விட அதிக உருமாற்றம்.. உருவானது வலிமையான புது வேரியண்ட்.. பீதி கிளப்பும் IHU Coronavirus!
பாரிஸ்: ஓமிக்ரானை விட அதிக உருமாற்றம் அடைந்த IHU வகை உருமாறிய கொரோனா பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகமாக பரவி வருகிறது. பல லட்சம் பேர் ஏற்கனவே உலகம் முழுக்க ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் கேஸ்கள் இதனால் பதிவாகிறது.
பல நாடுகளில் மூன்றாம் அலை தோன்றிவிட்டது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஓமிக்ரான் அச்சமே இன்னும் போகாத நிலையில்தான் புதிய வகை கொரோனா ஒன்று கண்டறியப்பட்டது.

IHU வகை கொரோனா
இந்த நிலையில்தான் பிரான்சில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு IHU வகை கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அறிவியல்முறைப்படி B.1.640.2 உருமாற்றம் ஆகும். பிரான்சின் பிரபல IHU Mediterranee Infection மருத்துவமனையில் இந்த உருமாற்றம் அடைந்த வேக்சின் கண்டறியப்பட்டதால் IHU வகை கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஓமிக்ரானை விட அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

உருமாறிய கொரோனா
இந்த IHU வகை கொரோனாவில் மொத்தம் 46 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவில் 32 உருமாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து இருந்தது. IHU வகை கொரோனாவில் 46 பெரிய உருமாற்றங்களும், 36 கிளை மாற்றங்களும் நடைபெற்று இருக்கிறது. இதனால் இது வேகமாக பரவுமோ என அச்சம் எழுந்துள்ளது. IHU வகை கொரோனா காரணமாக இதுவரை பிரான்சில் 12 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிரான்ஸ் உருமாறிய கொரோனா
மார்செல்லிஸ் என்ற பகுதிக்கு அருகே இந்த 12 கேஸ்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் சமீபத்தில் ஆப்ரிக்காவில் இருக்கும் கேமரூன் நாட்டிற்கு செய்துவிட்டு திரும்பி வந்தவர்கள். இதனால் அங்கு இந்த IHU வகை கொரோனா பரவிக்கொண்டு இருக்குமோ என்ற அச்ச எழுந்துள்ளது. ஆனால் IHU வகை கொரோனா இதுவரை வேறு எந்த நாட்டிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அதிக உருமாற்றம் காரணமாக IHU வகை கொரோனா மீதான அச்சம் அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் கொரோனா
மொத்தம் 14 அமினோ ஆசிட் உருமாற்றங்கள், N501Y மற்றும் E484K ஆகிய இரண்டு முக்கிய புரோட்டின் உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பைக் புரோட்டினில் 9 கிளை உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இதை B.1.640.2 உருமாற்றம் என்று அழைக்கிறார்கள். உலகம் முழுக்க நிறைய உருமாறிய கொரோனா பரவிக்கொண்டுத்தான் இருக்கின்றன. ஆனால் இது எல்லாம் மோசமானதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதில் பலவற்றை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
Recommended Video

IHU கொரோனா உருமாற்றம்
ஆனால் இந்த IHU வகை கொரோனா அதிக உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் இது அச்சம் அளிக்கிறது. ஓமிக்ரான், டெல்டா போல இது இல்லை. இதனால் அதை அடிப்படையாக வைத்து ஆர்டிபிஆர் சோதனையில் இதை கண்டுபிடிக்க முடியும். IHU வகை கொரோனா ஒரு கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று இன்னும் உலக சுகாதார மையம் அறிவிக்கவில்லை. இருப்பினும் இது பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் IHU வகை கொரோனா மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications