பிரான்ஸ் துயரம்.. 72 லட்சத்தை கடந்து செல்லும் பாதிப்புகள்.. கதிகலங்கும் மக்கள்.. எகிறி அடிக்கும் தொற்று
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பிரான்சில் அதிகரித்து வருகிறது
பாரிஸ்: சில நாட்கள் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் கொரோனாவைரஸ் தாக்கத்தின் பிடியில் சிக்கி உள்ளது பிரான்ஸ்.. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கலக்கம் தந்து வருகின்றன.
சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரஸ் தொற்றானது, உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.. 210 நாடுகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டும் செல்கிறது. எனவே, அந்தந்த நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பூசிகளை செலுத்துவதிலும் மும்முரமாகி வருகின்றன..

அதிகரிப்பு
டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.. உலகம் முழுவதும் இதுவரை 250,610,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5,064,585 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 226,841,797 பேர் குணமடைந்து வீடு திரும்பு உள்ளனர்.. இன்னமும் 18,704,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,627,995 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 76,075 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலிடம்
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் தொடர்ந்து உள்ளன. அந்த வகையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் கடுமையான பாதிப்பே இருந்தது.. தினசரி கொரோனா பாதிப்பும் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

நோயாளிகள்
தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகிளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. அதன்படி தொற்று ஓரளவு குறைந்து வந்தது.
Recommended Video

அறிவிப்பு
இதையடுத்து, தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.. மக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்றுகூட ஒருகூட்டத்தில் அந்த நாட்டு அரசு சொன்னது.. இப்போது நிலைமை அங்கு தலைகீழாகிவிட்டது.. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 1.18 லட்சத்தை நெருங்குகிறது என அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications