வசமாக சிக்கிய பாக். பிரதமர்.. வைத்து செய்யும் நெட்டிசன்கள்! குடையை பிடுங்கியதால் மழையில் நனைந்த பெண்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பாக். பிரதமர் ஷெரீப் அங்கே செய்த செயல் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இப்போது பெரும் குழப்பமான சூழலே நிலவி வருகிறது. அங்கே அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே விலைவாசியும் உச்சத்தில் இருக்கிறது.

இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் திவால் ஆகும் ஆபத்து கூட இருப்பதால், நிலைமையைச் சரி செய்யப் பாகிஸ்தான் சர்வதேச நாடுகளிடம் தொடர்ச்சியாக உதவிகளைக் கேட்டு வருகிறது.
ஷெபாஸ் ஷெரீப்: ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள பாலைஸ் ப்ரோக்னியார்ட் என்ற இடத்தில் புதிய குளோபல் நிதியுதவி ஒப்பந்த உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வந்திருந்தார். பாகிஸ்தானுக்கு இப்போது உதவிகள் தேவைப்படும் நிலையில், ஷெரீப் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். இருப்பினும், அங்கு அவர் நடந்து கொண்ட விதம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாக். பிரதமர் ஷெரீப் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்திருந்தார். அவர் வந்திருந்த போது பாரீஸில் மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில், ஷெரீப்பை அழைத்துச் செல்லப் பெண் ஒருவர் குடையுடன் வந்தார். இருப்பினும், ஷெரீப் அவரிடம் இருந்து குடையை வாங்கிக் கொள்கிறார். குடையை வாங்கிவிட்டு, ஷெரீப் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.
மழை: குடையை வாங்கிவிட்டால் அந்த பெண் மழையில் நனைவாரே என்பது குறித்தெல்லாம் ஷெரீப் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த பெண் சங்கடத்தில் மழையில் நனைந்தபடியே ஷெரீப்பிற்கு பின்னால் வருகிறார். நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஷெரீப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா வரவேற்றார். இந்த வீடியோவை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கமே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
Prime Minister Muhammad Shehbaz Sharif arrived at Palais Brogniart to attend the Summit for a New Global Financial Pact in Paris, France. #PMatIntFinanceMoot pic.twitter.com/DyV8kvXXqr
— Prime Minister's Office (@PakPMO) June 22, 2023
இந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீபின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு நாட்டிற்குப் பிரதமராக இருப்பவர் இப்படிச் செயல்படுவது இல்லை என ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். அதேபோல மற்றொரு தரப்பினர், இந்த வீடியோவை பிரதமர் அலுவலகமே டீவீட் செய்துள்ளதை தங்களால் நம்ப முடியவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்கள் அட்டாக்: நெட்டிசன் ஒருவர், "அந்த பெண்ணிடம் இருந்து குடையை வாங்க வேண்டிய அவசியம் என்ன? பாக். பிரதமரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வது தான் அந்த பெண்ணின் வேலை. அப்படியிருக்கும் போது அவர் எதற்காகக் குடையை வாங்கினார் எனப் புரியவில்லை" என்று சாடியுள்ளார்.

அதேபோல மற்றொருவர், "அவர் பதற்றமாக இருப்பது தெளிவாகவே தெரிகிறது. அவருக்கு அங்கே என்ன செய்ய வேண்டும் எனப் புரியவே இல்லை.. அவருக்கு யாராவது உதவி இருக்க வேண்டும். தனக்குக் குடையைப் பிடித்துக் கொண்டு அந்த பெண் வர வேண்டாம் என அவர் குடையை வாங்கி இருக்கலாம். ஆனால், குடையை வாங்கியதற்குப் பதிலாக வேறு எதாவது செய்திருக்கலாம்" எனப் பதிவிட்டுள்ளனர்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications