இதெல்லாம் ஒரு டிரெண்டா.. ஒரு காலில் ஜீன்ஸ்.. ஒரு காலில் டவுசர்.! ஆனா விலையை கேட்டால் தலை சுத்துதே!
பாரீஸ்: பேஷன் உலகில் திடீரென எதாவது ஒரு விஷயம் டிரெண்டாகும். அப்படி இப்போது டிரெண்டாகும் மேட்டர் தான் ஒற்றைக் கால் ஜீன்ஸ்.. டவுசரும் இல்லாமல் பேண்டும் இல்லாமல் இருக்கும் இந்த ஒற்றைக் கால் ஜீன்ஸ், சர்வதேச பேஷன் உலகையே புரட்டிப் போட்டு இருக்கிறது. ஒரு தரப்பினர் இதை வியந்து பாராட்டும் அதேநேரம் மற்றொரு தரப்பு மிகக் கடுமையாக விமர்சித்தே வருகிறது.
இந்த காலத்தில் திடீர் திடீரென எதாவது ஒரு விஷயம் டிரெண்டாகி விடுகிறது. இது என்ன இவ்வளவு மோசமாக இருக்கு என நாம் யோசிப்பது கூட திடீரென டிரெண்டாகிவிடும். அப்படி தான் இப்போது புதுவிதமான ஒரு டிரெண்ட் பேஷன் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இது என்ன வினோதமான டிரெண்ட் என நெட்டிசன்கள் பலருக்கும் குழம்பியே இருக்கிறார்கள். அது தான் ஒற்றை கால் ஜீன்ஸ்.

ஒற்றைக் கால் ஜீன்ஸ்
அதென்ன ஒற்றைக் கால் ஜீன்ஸ் என உங்களுக்குச் சந்தேகம் வரும். பொதுவாக ஜீன்ஸ் என்றால் அது முழு பேண்டாகவே இருக்கும். அதேநேரம் தற்போது ஜீன்ஸ் அரைக்கால் சட்டையும் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைத்தால் என்ன என்று ஒருவர் யோசித்து இருப்பார் போல.. அவரது சிந்தனையில் தான் இந்த ஒற்றைக் கால் ஜீன்ஸ் பிறந்துள்ளது.
விலையைக் கேட்டால் தலை சுத்துது
அதாவது ஒரு காலுக்கு வழக்கமான ஜீன்ஸ் பேண்ட் போல இருக்கும். அதேநேரம் மற்றொரு காலுக்கு ஜீன்ஸ் டவுசர் போலவே இருக்கும். இந்த வினோதமான டிரெண்ட் தான் ஒற்றைக் கால் ஜீன்ஸ்.. இதில் விஷயம் என்னவென்றால் இதன் விலை தான்.. இப்படி பேண்டாகவும் இல்லாமல் டவுசராகவும் இல்லாமல் இருக்கும் இந்த ஒற்றை கால் ஜீன்ஸின் விலை 440 டாலர்.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,345 ஆகும். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சொகுசு பொருட்களை விற்பனை செய்யும் கோபர்னி என்ற நிறுவனமே இதை விற்று வருகிறது.
இந்த ஒற்றைக் கால் ஜீன்ஸ் தொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், "இது கடற்கரை ஷார்ட்ஸை ஒற்றை கால் பூட்கட் பேண்ட் உடன் ஒன்றாக இணைக்கிறது. பாரம்பரியத்தில் இருந்து விலக்கி புதிய பேஷன் டிரெண்ட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தைத் தாண்டி புதிய எல்லைகளை உருவாக்கும் வகையில் இந்த கிளாசிக் கோபர்னி டெனிம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரண்ட கணவன்
ஃபேஷன் பிரபலமான கிறிஸ்டி சாரா என்பவர் இந்த ஜீன்ஸ் குறித்து வீடியோ ஒன்றைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஜீன்ஸ் என்று பதிவிட்டு இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த ஜீன்ஸ்ஸை பார்த்த அவரது கணவர் டெஸ்மண்ட்டுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. ஏன் ஒரு பக்கம் பேண்ட் மிஸ்ஸாகிறது என்று அவர் குழப்பத்துடன் கேட்கிறார்..
அதற்கு கிறிஸ்டி சாரா மிஸ் எல்லாம் ஆகவில்லை இதுதான் டிரெண்ட் என சொன்னதும் டெஸ்மண்ட் மிரண்டு போய்விட்டார். அதன் பிறகு கிறிஸ்டி சாரா அந்த ஜீன்ஸை போட்டுப் பார்க்கிறார். ஒரு காலில் காற்றோட்டம் நன்றாக இருப்பதாகவும் மற்றொரு கால் ஜீன்ஸில் வெதுவெதுப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் டவுசர் போல இருக்கும் பக்கத்தில் அது ரொம்ப டைட்டாக இருப்பதாகவும் கூறினார். இருப்பினும், இதைப் பார்த்தவுடன் அவரது கணவர் டெஸ்மண்ட் வெடித்துச் சிரித்தார். அவரால் இதெல்லாம் ஒரு பேஷன் என்பதை ஏற்கவே முடியவில்லை.
விமர்சனம்
அதேபோல எம்மி விருது பெற்ற பேஷன் கலைஞர் கார்சன் கிரெஸ்லியும் இந்த பேண்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த டிரெண்ட் சீக்கிரம் முடிந்துவிடுவது தான் அனைவருக்கும் நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் அதே கருத்தையே கூறி வருகிறார்கள். ஒற்றைக் கால் ஜீன்ஸுக்கு ரூ.40 ஆயிரம் எல்லாம் அதிகம் என்றும் கூறி வருகிறார்கள்.
அதேநேரம் ஒற்றைக் கால் ஜீன்ஸை சந்தைப்படுத்தும் முதல் நிறுவனம் கோபர்னி இல்லை. ஏற்கனவே போட்டேகா வெனெட்டாவும் லூயிஸ் உய்ட்டனும் இந்த ஒற்றைக் கால் ஜீன்ஸ்ஸை அறிமுகப்படுத்தினர். பலரும் இதை விமர்சித்தாலும் கூட வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அனைத்து ஸ்டாக்கும் விற்றுத் தீர்ந்துவிடுகிறதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications