ரெடியா? இது மிகப்பெரிய நீண்ட போராக இருக்க போகிறது.. ஜாக்கிரதை! பிரான்ஸ் அதிபர் பரபரப்பு வார்னிங்!
பாரிஸ்: உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மிக நீண்ட போராக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்யா கைப்பற்றும் நிலை உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே சமயம் ரஷ்யா மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இப்படி போர் தொடுக்க நேட்டோ படைக்களும், ஐரோப்பாவும் ஒரு காரணம் ஆகும். நேட்டோ நாடுகள், ஐரோப்பா நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டி வந்தது. ஐரோப்பாவிற்கு உக்ரைன் நெருக்கம் ஆனதால் ரஷ்யா அதை விரும்பாமல் தாக்குதல் நடத்தியது .

ஐரோப்பா
இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே உக்ரைன் பக்கம் இருப்பவர்தான் ரஷ்ய அதிபர் இம்மானுவேல் மேக்ரூன். முக்கியமாக ரஷ்ய அதிபர் புடின் - அமெரிக்க அதிபர் பிடன் இடையே பேச்சுவார்த்தையை ஏற்படுத்தவும் இவர் முயன்று வந்தார். ஐரோப்பா மூலம் இந்த விவகாரத்தில் சமாதான முயற்சி செய்யவும் முயன்று வந்தார். அது முடியவில்லை என்றதும் ரஷ்யா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மேக்ரூன் வைத்தார்.

உக்ரைன் படைகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்ததும், ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கடுமையான பதிலடியை கொடுப்போம். ரஷ்யா மிக மோசமான பின் விளைவுகளை சந்திக்க போகிறது. ரஷ்யா மீது பல்வேறு வகையான தடைகள் விதிக்கப்படும். ரஷ்யா உலக அளவில் தனித்து விடப்படும். தந்து செயலுக்கு ரஷ்யா பதில் சொல்லியே தீரும் என்று குறிப்பிட்டார்.

போர்
இந்த நிலையில் இன்று தனது நாட்டு அமைச்சர்களுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் அவசர ஆலோசனை செய்தார். அவர்கள் உக்ரைன் போர் பற்றி ஆலோசனை செய்தனர். இதற்கு பின் பேட்டி அளித்த மேக்ரூன், மேற்கு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. ஆனால் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் . இந்த போர் நீண்ட காலத்தில் இருக்கிறது. இதை நான் உறுதியாக சொல்ல முடியும்.

பெரிய போர்
அதேபோல் இந்த போர் காரணமாக ஏற்பட கூடிய பின் விளைவுகள் நீண்ட காலத்திற்கு இருக்கும். அதனால் வர கூடிய கிளை பிரச்சனைகளும் நீண்ட காலத்தில் இருக்கும். ஜாக்கிரதை. இந்த ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். உலக நாடுகள் நீண்ட ஒரு போருக்கு தயாராக இருக்க வேண்டும். ஐரோப்பாவில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்து உள்ளது. இதற்கு புடின்தான் காரணம். அவரின் கைகளில் ரத்த கறை உள்ளது என்று மேக்ரூன் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications