மோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ
Recommended Video
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்த முறை ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று நிகழ்ந்தது.
அப்போது இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கும், பிரதமர் மோடி, ஹிந்தியில் பதில் அளித்தார் மோடி.

ஆங்கிலம்
சில கேள்விகள் வரை பொறுமை காத்த, ட்ரம்ப், திடீரென ஒரு கமெண்ட் அடித்தார். "உண்மையில், மோடி என்னைவிட சிறப்பாக இங்கிலீஷ் பேசுவார். ஆனால், அவர் பேசுவதுதான் இல்லை" என்றார் ட்ரம்ப். இதனால், மோடிட உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
|
மோடி அடி
இதையடுத்து, தனது கையை மோடியை நோக்கி சிரித்தபடி கொண்டு சென்றார், ட்ரம்ப். அதை தனது இடதுகையால் தடுத்து பிடித்துக் கொண்ட மோடி, வலது கையை எடுத்து, ட்ரம்ப்பின் கையில் ஓங்கி பிரெண்ட்லியாக அடித்தபடி சிரித்தார். மோடி, ட்ரம்ப் கையில் அடித்த சத்தம், ஏதோ டீச்சர் மாணவர் கையில் பிரம்பால் அடித்ததை போல கொஞ்சம் சத்தமாகவே கேட்டது. இருப்பினும் ட்ரம்ப்புக்கு வலிக்கவில்லை போலும். சிரித்தபடி இருந்ததை கவனிக்க முடிந்தது.
|
சிரிப்பலை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் மோடி இவ்வாறு ஜாலியாக பேசியதையும், கையில் அடித்ததையும் பார்த்த கேள்வி கேட்ட பெண் நிருபரால் தனது கேள்வியை முடிக்க முடியவில்லை. அவர் தனது கேள்வியை தொடரும்போதே, சிரிப்பு வந்துவிட்டது. இவ்வாறு அந்த இடமே கலகலப்பாக மாறியது. அந்த வீடியோ இப்போது வைரலாக சுற்றத் தொடங்கியுள்ளது.

இரு தரப்பு
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே, சமரசம் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், மோடியுடனான, பேச்சுவார்த்தைக்கு பிறகு, காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான இரு தரப்பு பிரச்சினை என ட்ரம்ப் கூறிவிட்டார். இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications