"வெறும் 100 கிராம்.." வினேஷ் போகட் எடை அதிகரிக்க என்ன காரணம்! நடுவர் நீதிமன்றத்தில் அவரே சொன்ன தகவல்
பாரீஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவர் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே எடை அதிகரிக்க என்ன காரணம் என்பது தொடர்பாக அவர் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா ஒரு வெள்ளி, 6 வெண்கலத்துடன் 71ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதில் வினேஷ் போகட் மல்யுத்தத்தில் தங்கம் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மல்யுத்தம்: பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 50 கிலோ மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகட் தகுதி பெற்றிருந்தார். இருப்பினும், இறுதிப் போட்டிக்கு முன்பே அவர் 50 கிலோவுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்பது குறித்து வினேஷ் போகத் நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதற்கிடையே தனது எடை ஏன் திடீரென அதிகரித்தது என்பது தொடர்பாக வினேஷ் தரப்பு நடுவர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
என்ன காரணம்: அதாவது அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடியது, ஒலிம்பிக் வீரர்களின் கிராமத்திற்கும் போட்டி அரங்கிற்கும் இடையே உள்ள தூரம் ஆகியவையே எடை அதிகரிக்கக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மல்யுத்தப் போட்டி நடைபெறும் இடமான சாம்ப் டி மார்ஸ் அரீனாவிற்கும், ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடையே அதிக தூரம் இருந்ததாகவும் இதுவே எடையைத் திட்டமிட்டது போலக் குறைக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்..
ஒரே நாளில் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்ட நிலையில், மறுநாள் 52.7 கிலோவாக எடை அதிகரித்ததாகவும் இருப்பினும் அதன் பிறகு எடையைக் குறைக்க போதுமான நேரத்தை வழங்கவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், இரண்டாவது நாள் காலையில் வினேஷின் எடை 100 கிராம் அதிகரித்து இருந்த நிலையில், இதனால் வினேஷுக்கு எந்தவொரு லாபமும் இல்லை என்றும் வாதிட்டார்.
100 கிராம்: வினேஷ் தரப்பு மேலும் நடுவர் நீதிமன்றத்தில், "100 கிராம் எடை அதிகமாக இருப்பது என்பது ரொம்பவே கம்மி.. இது வீரர்களின் எடையில் 0.1 முதல் 0.2 சதவீதம் வரை மட்டுமே.. கோடைக் காலத்தின் போது மனித உடல் வீங்குவது எளிதாக ஏற்படலாம்.. ஏனென்றால் அதிக வெப்பம் இருக்கும் போது உயிர் பிழைக்க நமது உடல் அதிக தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இதனால் கோடைக் காலத்தில் இயல்பாகவே எடை அதிகரிக்கும்.
வெள்ளிப் பதக்கம்: மேலும், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை போட்டியிட்டதும் எடை அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். போட்டிகளுக்குப் பிறகு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட உணவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வீரர் எந்தவொரு மோசடியும் செய்யவில்லை. இருந்தாலும் அவரால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவரது கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு வெள்ளிப் பதக்கத்தையாவது வழங்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications