Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டிகள் முடிஞ்சிருச்சு ஓகே.. இப்போ பல நூறு கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒலிம்பிக் கிராமம் என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நடந்த 2 வாரங்களாகக் கோலாகலமாக நடந்த ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்க அங்கே மிகப் பெரிய ஒலிம்பிக் கிராமம் கட்டப்பட்டது. இந்த ஒலிம்பிக் கிராமம் போட்டிகளுக்குப் பிறகு என்ன நடக்கும்.. இதற்கு முந்தைய ஒலிம்பிக் கிராமங்களின் நிலை என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

பிரான்ஸில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடப்பது இது இரண்டாவது முறை. அங்கே கடந்த 1924ம் ஆண்டு முதலில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நிலையில், சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்துள்ளது.

Olympics 2024 france sports 2024

ஒலிம்பிக் கிராமம்: அந்த 1924இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தான் முதலில் முறையாக ஒலிம்பிக் கிராமங்கள் அமைக்கப்பட்டன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இணை நிறுவனர் பியெர்ரே டே கோபெர்டின் என்பவர் தான் இந்த ஒலிம்பிக் கிராமத்தை உருவாக்கினார். விளையாட்டு வீரர்கள் தங்கவும், எளிதாகப் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து செல்வதை உறுதி செய்யவே இது முதல்முறையாகக் கட்டப்பட்டன.

அதற்கு முன்பு 1896 முதல் 1920 வரையிலான ஒலிம்பிக் போட்டிகளின் போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஹோட்டல்கள், விடுதிகள், பள்ளிகள், முகாம்கள் மற்றும் சில சமயங்களில் இடம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் பயணித்த படகுகளில் கூட .தங்கும் சூழல் இருந்தது. இந்த பிரச்சினைகளை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வரவே ஒலிம்பிக் கிராமம் கட்டப்பட்டது. முதலில் 1924இல் அமைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் கிராமம் தற்காலிக கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டது. எனவே, போட்டி முடிந்ததும் அதை எளிதாக அகற்றிவிட்டார்கள்.

அகற்றப்பட்டது: அப்போது தற்காலிக கட்டமைப்பாக இருந்ததால் அதை அகற்றிவிட்டார்கள். ஆனால், இப்போது ஜிம், பிரத்தியேக சமையலறை, ஏசி எனப் பல வசதிகள் இருப்பதால் ஒலிம்பிக் கிராமங்கள் கட்டிடங்களாகவே கட்டி எழுப்பப்படுகிறது. இதனால் அவற்றை இடித்து எல்லாம் தள்ளிவிட முடியாது. வேறு எதாவது ஒரு விஷயத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.

சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் நிலையில், இந்த முறை பாரீஸின் வடகிழக்கு புறநகர்ப் பகுதியில் ஒலிம்பிக் கிராமம் கட்டப்பட்டுள்ளது. அங்கு இதற்கு முன்பு பெரியளவில் கட்டுமானங்கள் இல்லாத நிலையில், அந்த இடத்தை தேர்வு செய்து பிரான்ஸ் அரசு டெவலப் செய்தது. இப்போது ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நிலையில், இம்மாத இறுதியில் பாரா ஒலிம்பிக் நடைபெற உள்ளது. அதற்காகவும் இந்த ஒலிம்பிக் கிராமம் பயன்படுத்தப்படும்.

எதற்கு பயன்படும்: அதன் பிறகு இந்த ஒலிம்பிக் கிராமத்தை ஆபீஸ் மற்றும் குடியிருப்பு பகுதிகளாகப் பயன்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பாரீஸில் உள்ள இந்த ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 82 கட்டிடங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் 6000 பேர் வரை வேலை பார்க்கலாம். மேலும், 6000 பேருக்குக் குடியிருப்பாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் ஒலிம்பிக் கிராமம்: சரி முந்தைய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கட்டப்பட்ட ஒலிம்பிக் கிராமங்களின் நிலையைப் பார்க்கலாம். 2021இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஹருமி என்ற பகுதியில் ஒலிம்பிக் கிராமம் கட்டப்பட்டது. 5000 யூனிட்களுடன் 21 கட்டிடங்களை அது கொண்டிருந்தது. இது தவிர டிராக் சைக்கிள் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சைதாமாவிலும் படகு ஓட்டுதல் பிரிவில் கலந்து கொள்வோருக்கு எனோஷிமாவிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+