"பிளே பாய்" அட்டை படத்தில் பெண் அமைச்சர்! அதுவும் எப்படி தெரியுமா! பெரும் சர்ச்சை! அதிரும் பிரான்ஸ்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பிளே பாய் இதழுக்கு போஸ் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது. இருப்பினும், அவர் தான் செய்தது சரி என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.
பிரபல அடல்ட் இதழான பிளேபாய்க்கு போஸ் கொடுப்பது பெண்ணியமாகக் கருத முடியுமா? ஐரோப்பாவில் உள்ள முக்கிய நாடான பிரான்ஸ் நாட்டில் இப்போது இது தான் விவாதமாக நடந்து வருகிறது.
அங்கே உள்ள பெண் அமைச்சர் ஒருவர் தான் பிளேபாய்க்கு போஸ் கொடுத்துள்ளார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

பிரான்ஸ் அமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் இப்போது அமைச்சராக உள்ளவர் மார்லின் ஷியாப்பா.. 40 வயதான இவர் தான் பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் கொடுப்பார்கள். ஆனால், மார்லின் ஷியாப்பா அப்படிச் செய்யாமல், டீசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார். இருப்பினும், அமைச்சர் ஒருவர் 18+ இதழுக்கு எப்படி போஸ் கொடுக்கலாம் என்பதே இப்போது சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது.

பிளே பாய்
பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள், கருக்கலைப்பு ஆகியவை குறித்து பிளேபாய் இதழுக்கு 12 பக்க நேர்காணலுடன் போஸ் கொடுத்தது தான் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 2017 முதல் பிரான்ஸ் அரசில் அங்கம் வகித்து வரும் மார்லின் சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை. இருப்பினும், அவரது இந்த செயல் அரசில் இருக்கும் வலதுசாரிகளை கோபப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரதமர் தொடங்கிப் பல வலதுசாரிகளும் அவர் தவறு செய்துவிட்டதாகக் கருதுகின்றனர்.

தவறில்லை
இருப்பினும், தான் செய்தது சரி என்றே மார்லின் கூறி வருகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "பெண்கள் தங்கள் உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களின் உரிமை. அதற்காக எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் குரல் கொடுப்பேன். பிரான்சில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். அது பிற்போக்குவாதிகளைக் கோபப்படுத்துவதாக இருக்கிறது" என்றார்.

பிரான்ஸ் போராட்டம்
அங்கே ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்த பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அது குறித்து எதுவும் சொல்லாமல், மார்லின் இப்படிச் செய்துள்ளதை ஏற்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர். அங்குப் பிரதமராக உள்ள எலிசபெத் போர்ன் (பிரான்ஸின் 2ஆவது பெண் பிரதமர்) இப்போது நமது நாடு இருக்கும் காலகட்டத்திற்கு இது முற்றிலும் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு
மற்றொரு எம்பி கூறுகையில், "பிரான்ஸ் மக்களுக்கு மரியாதை எங்கே போனது.. இப்போது உழைக்கும் வர்க்கத்தினர் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதற்காகப் போராடுபவர்கள் சம்பளத்தை இழக்கிறார்கள். பணவீக்கத்தால் அவர்களால் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியவில்லை.. சமூகத்தில் இப்படியொரு சூழல் இருக்கும்போது அவர் இப்படிச் செய்ததை ஏற்க முடியாது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

பிளேபாய் விளக்கம்
பிளேபாய் இதழும் தாங்கள் செய்தது தவறில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "மார்லின் பெண்களின் உரிமைகளைப் பேசியுள்ளார். மேலும், எங்கள் பத்திரிக்கை ஆண்களுக்கான பத்திரிகை மட்டுமில்லை. பெண்ணிய நோக்கத்திற்கான ஒரு கருவி என்பதை அவர் புரிந்துகொண்டார். பிளேபாய் ஒரு ஆபாச இதழ் இல்லை. அது 300 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் மற்றும் பத்திரிகையின் கலவை. அது அறிவுசார் புத்தகம்" என்று சமாளித்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications