உலகிலேயே காஸ்ட்லி ஆணுறை.. விஷயத்தை கேட்டதுமே ஆடிப்போயிட்டாங்க.. இதுதான் ஸ்பெஷலா? பன்றி, ஆடு, கன்று
பாரீஸ்: ஆணுறை போட்டோ ஒன்று இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.. இந்த ஆணுறையில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஆணுறைகளை பயன்படுத்துவதால், பல வகையான பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆணுறையை பயன்படுத்தினால், தேவையற்ற கர்ப்பம் அல்லது தொற்றுகள் அல்லது பால்வினை நோய்களை தடுக்க முடியும். HIV, கோனோரியா, கிளமிடியா போன்ற பாலியல் தொற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்க முடியும்.

அவசியம்: இல்லாவிட்டால் STD, HIV அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மட்டுமல்ல, ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ்கள் ஒருவருக்கொருவர் பரவுகிறது. எனவே, ஆணுறை பயன்படுத்தினால் இந்த ஆபத்தை குறைக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருந்து வருகிறது.
எனினும், ஆணுறை விலைகள் குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. சமீபத்தில்கூட, வெனிசுலாவில் ஒரு ஆணுறையின் விலை 60,000 ரூபாய் விற்கப்படுவதாக தகவல்கள் வந்தன. வெனிசுலாவை பொறுத்தவரையில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது.. அதனால்தான் இவ்வளவு விலை விற்கப்படுகிறதாம். ஆனாலும், கருத்தடை மாத்திரைகளின் விலையும் அதே அளவுக்கு அதிகமாக உள்ளது.
கருத்தடை மாத்திரை: யாராவது கருவை கலைத்து பிடிபட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். உள்ளூரிலேயே நிறைய பிராண்ட் கருத்தடை மாத்திரைகள் கிடைக்கும் என்றாலும், பாதுகாப்பு வெளிநாட்டு பிராண்டுகளை வாங்குகிறார்களாம். சிலர் மாத மாதம் தங்கள் சம்பளத்தில் பாதியை ஆணுறை வாங்கவே செலவு செய்வதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இப்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.. அதாவது, பிரான்சில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறைதான் பரபரப்பாக தற்போது பேசப்படுகிறது.. கிட்டத்தட்ட 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்த ஆணுறை ஏலத்திலும் விடப்பட்டுள்ள. இந்த ஆணுறையின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
தயாரிப்பு: இந்த ஆணுறையானது, ஆடு குடலில் தயாரிக்கப்பட்டதாகும்.. நம்ம ஊர் மதிப்பில் 44,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது... இந்த ஆணுறை 19 செ.மீ நீளத்தில் இருக்கிறது.. அதேபோல இதனுடைய தயாரிப்பு முறையும் பலருக்கு ஆச்சரியத்தை தந்து வருகிறது.
ஆடு, பன்றி, செம்மறி, கன்றுகள், வெள்ளாடு இவைகளின் குடலிலிருந்து இந்த ஆணுறைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.. ஆனால், அந்த காலத்தில், மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் உயர்தரத்தினர் மட்டுமே இந்த ஆணுறைகளை பயன்படுத்தினார்கள்.. அதனால் சமூக அந்தஸ்தையும் இந்த ஆணுறைகள் நிர்ணயித்திருக்கின்றன.
பழமையான ஆணுறை: 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை, வரலாற்றின் சின்னமாகவும், பழைய தொழில்நுட்பத்தின் சான்றாகவும் இன்று திகழ்ந்து வருகிறது.. இத்தனை பழமையுடன், 44000 ரூபாய்க்கு விற்கப்படுவதால்தான, உலகின் மிக உயர்ந்த ஆணுறை என்று கூறி, இதனை சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications