என்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாட்னாவில் உள்ள ஒரு வங்கியில் தலையில் ஹெல்மெட் போட்டவாறு பணத்தை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன.

பாட்னாவின் முசாஃபர்நகரில் கோபர்சாஹி என்ற பகுதியில் ஐசிஐசிஐ வங்கி உள்ளது. இங்கு நேற்று வங்கி நேரத்தில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பணிகளுக்காக வங்கிக்கு வந்திருந்தனர்.

6 people were looted Rs 8 lakhs in Patna bank

அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட்டுடன் உள்ளே நுழைந்தது. அவர்கள் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் வங்கி காவலாளியின் துப்பாக்கியையும் திருடிச் சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது. சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் இரவில் நுழைந்த கொள்ளையர்கள் விலங்குகளின் முகமூடிகளை அணிந்து கொண்டு கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்களையே விஞ்சும் அளவுக்கு ஹெல்மெட் போட்டுக் கொண்டு பீகார் வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+