3 கிமீ தூரம்.. கங்கையின் பெருவெள்ளத்தில் மிதந்து.. பாகனை காத்த கம்பீர யானை.. சிலிர்க்க வைத்த வீடியோ!
பாட்னா: உலகம் முழுக்க நாளுக்கு நாள் வெறுப்பு அதிகரித்து வருகிறது. மனிதர்களை மனிதர்களே வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்தியாவில் சமீப காலமாக மத வெறுப்பு, சாதி வெறுப்பு மோதல்கள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட இக்கட்டான காலத்தில் அன்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறது.
Recommended Video
கங்கை நதி உலகின் புனிதமான நதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்துக்களுக்கு இந்த நதி மிகவும் புனிதமான ஒன்று மட்டுமின்றி.. பாவம் தீர்க்கும் தீர்த்தமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த கங்கையில் நடந்த சம்பவம் ஒன்றுதான் நெட்டிசன்கள், மக்கள் இடையே கவனத்தை ஈர்த்து உள்ளது.

மழை வெள்ளம்
வடஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது தீவிர கனமழை பெய்து வருகிறது. உத்தரகாண்டில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் வெள்ளம் காரணமாக பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கி உள்ளன. உத்தர பிரதேசத்திலும் பல்வேறு நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விடாமல் மழை பெய்து வரும் நிலையில்தான் நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

வெள்ளம் யானை
இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தின் ரஸ்தம்பூரில் இருந்து பாட்னா நோக்கி யானை பாகன் ஒருவர்.. யானையில் சென்று இருக்கிறார். அடிக்கடி இந்த பாதையில் செல்லும் அவர் வழக்கமாக யானையோடு கங்கை நதியை கடப்பது வழக்கம். கங்கை நதியில் சில குறிப்பிட்ட ஆழம் இல்லாத இடங்களில் யானை அப்படியே நடந்து சென்றுவிடும். அதோடு தண்ணீரும் யானை உயரத்திற்கு செல்லாது என்பதால் சிக்கல் இல்லை.

வெள்ளம்
ஆனால் நேற்று முதல்நாள் அந்த யானையும், பாகனும் நதியை கடக்கும் போது திடீரென வெள்ளம் வந்துள்ளது. யானை பாகன் சுதாரிக்கும் முன் திடீரென வெள்ளம் வந்து யானையை மூழ்கடித்து உள்ளது. இதில் யானை அப்படியே நீருக்குள் மூழ்கி உள்ளது. யானை மட்டும் தடுமாறி விழுந்து இருந்தால் அவ்வளவுதான் பாகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பார்.

தலையை தாண்டி வெள்ளம்
அந்த வெள்ளமோ யானையை மொத்தமாக மூழ்கடித்து தலைக்கும் மேலே சென்றுள்ளது. இதை பாகனே எதிர்பார்க்கவில்லை. யானையை எப்படியாவது வெளியே கொண்டு வர பாகன் முயன்று இருக்கிறார். ஆனால் அந்த யானையோ பாகனை காக்க வேண்டும் என்பதற்காக கங்கை நதியில் உள்ளே மூழ்கியபடியே அப்படியே நகர்ந்து உள்ளது. உள்ளேயே யானை மூச்சை பிடித்தபடியே.. அவ்வப்போது எட்டிப்பார்த்து நகர்ந்து உள்ளது.

3 கிமீ
இப்படி ஒரு கிலோ மீட்டர் அல்ல.. மொத்தம் 3 கிமீ அந்த யானை நகர்ந்துள்ளது. பாகனுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்பதால் யானை அவ்வளவு பெரிய வெள்ளத்திலும் கவனமாக வந்தது அங்கு இருந்த பலரையும் வியக்க வைத்தது. 3 கிமீ இந்த பெருவெள்ளத்தில் மிதந்து வந்த யானை ஒரு வழியாக பாதுகாப்பாக கரைக்கு வந்தது. இதில் பாகனுக்கும், யானைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவர்கள் கங்கை நதியை கடக்கும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications