காத்து வாக்குல ரெண்டு காதல்! கணவன் முன் ‘போர்வைக்குள்’.. பாதி ராத்திரியில் பறந்த பச்சைக் கிளி..!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பெற்றோர்களுடன் சண்டையிட்டு இரண்டு ஆண்டுகளாக காதலித்த காதலனை கரம் பிடித்த இளம்பெண் ஒருவர் 45 நாட்களுக்குப் பிறகு பணம் மற்றும் நகைகள் உடன் அதற்கு முன்னர் காதலித்த மற்றொரு காதலனுடன் நடுராத்திரியில் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நவீன யுகத்தில் செல்போன்கள் நம் வாழ்வை ஆக்கிரமித்துள்ள நிலையில் குடும்பத்திலுள்ள அனைவருமே இருபத்தி நான்கு மணி நேரத்தில் பெரும்பகுதியை செல்போன்களில் உள்ள சமூக வலைதளங்களை கழித்து வருகின்றனர்.
இதன் காரணமாக நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது குறிப்பாக சமூக வலைதளங்களில் உலாவும் பெண்கள் தவறான வழிகளில் சிக்கி குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் தீராத மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அதிர்ச்சி சம்பவம்
குறிப்பாக திருமணத்திற்கு பிறகு பல்வேறு நபர்களின் காதல் வலைகளில் சிக்கி குடும்பப் பெண்கள் சிதறிவிடும் அதிகரித்து தான் வருகிறது. திருமணம் தாண்டிய உறவுகளால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வருவதை தினமும் நான் கண்கூடாகப் பார்க்கிறோம் அந்த வகையில்தான் பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக காதலித்த காதலனை கரம் பிடித்த இளம்பெண் ஒருவர் 45 நாட்களுக்குப் பிறகு பணம் மற்றும் நகைகள் உடன் அதற்கு முன்னர் காதலித்த மற்றொரு காதல் நடுராத்திரியில் சென்றுள்ளார்.

காதல் திருமணம்
பாட்னா அருகே நவட்பூர் பகுதியைச் சேர்ந்த சத்தியானந்த் என்பவர் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராணி குமாரி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பெற்றோர்களின் கால்களில் விழுந்து சத்யானந்தை தான் திருமணம் செய்து கொள்வேன் என ராணி குமாரி அடம் பிடித்ததோடு சாப்பிடாமலும் இருந்துள்ளார்.

நள்ளிரவில் வீடியோ கால்
இதனால் வேறுவழியின்றி கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி 45 நாட்களாக தம்பதிகள் மகிழ்ச்சியாக தான் இருந்து வந்துள்ளனர். திருமணம் முடிந்து சத்யானந்த வீட்டுக்கு வந்த பிறகு ராணி குமாரியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்துள்ளது. எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடந்த ராணி குமாரி சமூக வலைதளங்களில் யார் யாருடனோ பேசியதோடு இரவு நேரங்களில் கணவன் தூங்கிய பிறகு போர்வையை போர்த்திக்கொண்டு வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவருடன் சண்டை
இந்நிலையில்தான் சத்தியானந்த் உடன் வாழ விருப்பமில்லை என வெளிப்படையாக சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து பெற்றோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் தூங்கிய நிலையில் நள்ளிரவில் விழித்த ராணி குமாரி தனது பெற்றோர் தனக்கு போட்ட நகைகள் , வீட்டில் நகைகள் மற்றும் பணம் என கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு முன்னாள் காதலன் தலைமறைவாகி விட்டார்.

காதலனுடன் எஸ்கேப்
திருமணநாள் ஒன்றரை மாதத்தில் மனைவி ஓடிப்போனது குறித்து சத்யானந்த் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் புகாரை எடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்த காதலனை விட்டுவிட்டு முன்னாள் காதலனுடன் மாயமான ராணி குமாரியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications