பீகார்ல சம்பவம் இருக்கு.. பாஜக இந்த முறை தொக்கா தூக்க முடியாது.. சிக்கல் தான்! பரபர சர்வே ரிசல்ட்!
பாட்னா: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் எந்த கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்பது குறித்த ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசியலில் மிக முக்கியமான மாநிலமாக பீகார் பார்க்கப்படுகிறது. லோக்சபாவுக்கு அதிக அளவு எம்பிக்களை அனுப்பும் மாநிலங்களில் 4வது இடத்தில் பீகார் இருக்கிறது. மட்டுமல்லாது, லோக்சபா தேர்தலில் ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் உத்தரப் பிரதேசம்+பீகார் இரண்டு மாநிலங்களை தவறவிடமாட்டார்கள். ஏனெனில் இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து தொக்காக 120 தொகுதிகள் இருக்கின்றன. இதனை மொத்தமாக எந்த கட்சி கைப்பற்றுகிறதோ, அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் முடிந்தவரை டஃப் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சிம்பிளாக சொல்வதெனில் இம்மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 50% வாக்கை பாஜக கூட்டணி அள்ளும். அதேபோல, 35% ஓட்டுகளை காங்கிரஸ் கூட்டணி தக்கவைக்கும்.
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆர்எல்எஸ்பி கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 39 தொகுதிகளை வென்றது. இந்த முறை 32 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி 8 இடங்களில் வெல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என்னதான் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லப்பட்டாலும், வாக்கு சதவிகிதம் மற்றும் தொகுதி இழப்பு ஏற்படும் என்று வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக நிர்வாகிகளிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மறுபுறம் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. பீகார் மாநிலத்தை பொறுத்த அளவில் 6-7 கட்டங்களாக தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமாரின் அரசியல் செயல்பாடுகள் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. கடந்த 2022ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்.
அதன் பின்னர் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார். ஆனால், மீண்டு பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டார். இவரது நிலைத்தன்மையற்ற அரசியல் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதுவே பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications