பீகார் சீமாஞ்சலில்.. பலனளிக்காத M+Y பார்முலா! அள்ளி தூக்கிய அசாதுதீன் ஓவைசி கட்சி
பாட்னா: பீகார் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிதான் சீமாஞ்சல் என்று அழைக்கப்படுகிறது. SIR நடவடிக்கையின் போது இந்த பகுதியில் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இப்படி இருக்கையில், தேஜஸ்வி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது. மறுபுறம் அசாதுதீன் ஓவைசியின் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.
பீகாரின் அராரியா, பூர்ணியா, கதிஹார், கிஷன்ஞ்ச் மாவட்டங்கள் சீமாஞ்சல் பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் மொத்தம் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தொகுதிவாரியாக வெற்றி மற்றும் முன்னிலை விவரங்களை பொறுத்தவரை,

- பகதூர்கஞ்ச் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 28,726
- தாக்கூர்கஞ்ச் - ஜேடியு வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 8,822
- கிஷன்ஞ்ச் - காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 12,794
- கோச்சாதாமன் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 23,021
- அமௌர் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 38,928
- பைசி - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 27251
- கஸ்பா - ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 12,875
- பன்மன்கி - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 45,296
- ரூபௌலி - ஜேடியு வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 73,572
- தாம்டாஹா - ஜேடியு வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 55,159
- பூர்ணியா - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 33,222
- அராரியா - காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 12,741
- ஜோகிஹாட் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 28,803
- சிக்தி - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 19,322
- ஃபார்விஸ்கஞ்ச் - காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 221
- கதிஹார் - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 22,154
- கட்வா - ஜேடியு வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் - 18,368
- பல்ராம்பூர் - LJPRV கட்சி வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் - 389
- பிரான்பூர் - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் - 7,752
- கோர்ஹா - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் - 22,257
மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில்தான் மகாபந்தன் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற தொகுதிகளில் என்டிஏ கூட்டணியும், 5 தொகுதிகளில் ஓவைசி கட்சியும் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த 2020 சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை குறைவான தொகுதிகளைதான் இந்தியா கூட்டணி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும், ஓவைசி கட்சி 5 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் வெறும் 2 தொகுதிகளிலும்தான் வெற்றி பெற்றிருந்தது.
பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் பெரியதும் நம்பியது M+Y பார்முலாவைதான். அதாவது முஸ்லிம் மற்றும் யாதவ் வாக்குகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் சீமாஞ்சல் பகுதியில் இந்த பார்முலா எடுபடவில்லை. குறிப்பாக முஸ்லிம் வாக்குகளை ஓவைசி ஒன்று திரட்டியுள்ளார். அல்லது குறைந்தபட்சம் அதை சிதறவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்.
இந்த வெற்றி குறித்து ஓவைசி கூறுகையில், "பீகாரின் முடிவு மக்களின் தெளிவான தீர்ப்பு. இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். முஸ்லிம்+யாதவ் வாக்காளர்கள் தற்போதுதான் சரியாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். பாசிச சக்திகளுக்கு வாக்களிக்க வேண்டாம். பாஜகவை ஏன் தடுக்க முடியவில்லை என்று அவர்கள் யோசிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எங்கள் கட்சியை விமர்சிப்பதன் மூலம் எதுவும் நடக்காது. உங்கள் பலவீனங்களை நீங்கள் உணர வேண்டும். முதலில், நீங்கள் பணிவாக இருக்க வேண்டும். நான்தான் ராஜா, வாக்காளர்கள் எங்கள் குடிமக்கள் என்று நினைக்காதீர்கள். அந்த காலம் மலையேறிவிட்டது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications