கிரிக்கெட் பால் அளவு.. மூளையில் இருந்து நீக்கப்பட்ட ராட்சச கருப்பு பூஞ்சை.. மருத்துவர்கள் அதிர்ச்சி!
பாட்னா: பாட்னாவில் ஒருவரின் தலையில் இருந்து பெரிய கிரிக்கெட் பால் அளவிற்கு கருப்பு பூஞ்சை நீக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கரும்பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. 51% இறப்பு சதவிகிதம் கொண்ட கரும்பூஞ்சை தாக்குதல் மிகவும் கொடூரமான நோயாக பார்க்கப்படுகிறது.இந்தியாவில் இது தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக நீரழிவு குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. மூக்கு வழியாக அல்லது காது வழியாக உடலுக்குள் செல்லும் கரும்பூஞ்சை இதயம், மூளையை தாக்கும் ஆபத்து கொண்டது.

என்ன
ஒரு குழுவாக காணப்பட கூடிய அச்சு வடிவிலான பூஞ்சைகளின் தொகுப்புதான் மியூக்கர்மைக்கோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி, எச்சிலில் ரத்தம், தொண்டையில் வலி, மூக்கடைப்பு ஆகியவை பிளாக் பங்கஸ் ஏற்பட்டால் வர கூடிய அறிகுறிகள் ஆகும். இந்த நிலையில்தான் பாட்னாவில் ஒருவரின் தலையில் இருந்து கருப்பு பூஞ்சை நீக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை
பீகாரின் பாட்னாவில் இந்திரா காந்தி மெடிக்கல் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அணில் குமார் என்ற அந்த நோயாளி அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு தலைவலி அடிக்கடி வந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செய்யப்பட்ட சோதனையில் 60 வயதான அணில் குமாருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

நீக்கம்
தலையில் பெரிய கருப்பு பூஞ்சை தொகுப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே அவருக்கு ஆபரேஷன் செய்து, கருப்பு பூஞ்சையை நீக்கி உள்ளனர். 3 மணி நேரம் இந்த ஆப்ரேஷன் நடந்து உள்ளது. தற்போது இவர் நலமுடன் இருக்கிறார்.

மூக்கு
சமீபத்தில் இவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். இவருக்கு மூக்கு வழியாக கருப்பு பூஞ்சை உள்ளே சென்று இருக்கிறது. கண்களை லேசாக தொட்டுவிட்டு பூஞ்சை சென்றுள்ளது. ஆனால் கண்களை நேரடியாக பெரிதாக பாதிக்கவில்லை. இதனால் இவர் கண் தப்பித்தது.

மூளை
மூளைக்கு நேராக சென்ற பூஞ்சை அங்கேயே சென்று தங்கி உள்ளது. இதனால்தான் இவருக்கு தலைவலிஏற்பட்டது. அங்கு வேகமாக இது பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் உரிய ஆபரேஷன் மூலம் கருப்பு பூஞ்சை மொத்தமாக நீக்கப்பட்டது. கிரிக்கெட் பால் அளவிற்கு இருந்த மிகப்பெரிய ராட்சச கருப்பு பூஞ்சையை அகற்றி அந்த நபரின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications