Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாருக்கு மோடி போயே ஆகணுமா? சுப்பிரமணிய சாமியை ஒன்னுமே சொல்றதில்லை..திருமாவளவன்னா இளக்காரம்: திருமா

Subscribe to Oneindia Tamil

பாட்னா: "ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம் இருக்க வேண்டுமென்பது ஆர்எஸ்எஸ் கோட்பாடாக உள்ளது... பல மதங்கள், கலாச்சாரம், பல மொழி இருக்க கூடாது இந்தி எல்லோரும் பேச வேண்டும் என்பதுதான் இந்துத்துவா அஜெண்டா.. இந்துத்துவாவிற்கு எதிராக விசிக பேசுவதாக தோற்றத்தை பாஜக உருவாக்குகிறது" என விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.. காஷ்மீருக்கு போகாமல், பிரதமர் பீகாருக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார். 26 உயிரிழப்புகளை விட பிரச்சாரம் முக்கியமா? என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2 நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த திருமாவளவன், "ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து காஷ்மீர் வன்முறையை தடுக்க இந்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அமைதி நிலவுகிறது, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

Bihar Tirumavalavan BJP

தொடரும் பயங்கரவாதம்

இந்திய அரசமைப்பின் 370வது பிரிவை மாற்றி ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டதாகவும் சொல்லி மகிழ்ந்தார். ஆனாலும் அங்கே பயங்கரவாதம் தொடரும் என்பதை தான் இந்த கொடூர நிகழ்வு உணர்த்துகிறது.. பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.. இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ள சூழலில் அந்த பகுதிக்கு நேரில் சென்றிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும்.. இதை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் அமைதியின்மை நிலவுவதற்கு இந்திய ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நாள்தோறும் மக்களை பிரிக்கும் செயலில் தேர்தல் ஆதாயத்திற்காக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து கொண்டு இருந்தால் எப்படி ஒற்றுமை நிலவும்?'' என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.

காஷ்மீர் படுகொலை

இந்நிலையில் இன்றைய தினம், மீண்டும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் திருமாவளவன்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசிகவின் மறைந்த 2 நிர்வாகிகளின் உருவ படத்தினை திறந்து வைத்து பொதுக்கூட்ட மேடையில் திருமாவளவன் பேசியதாவது: "காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலை தந்துவருகிறது. சுற்றுலா சென்றவர்களை எதிர்பாராத சூழலில் பயங்கார வாத கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்கள.. இதில், முஸ்ஸீம் சமூகத்தினரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்தினை எதிர்த்து எந்தவடிவத்தில் இருந்தாலும் ஏற்க முடியாது.

அமித்ஷா பதவி விலக வேண்டும்

சட்டீஸ்கரில் அரசு பயங்கரவாதத்திற்கு கண்டிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்று நான் சொன்னதற்கு ஆவேசப்படுகிறார்கள், நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும், இந்தியர் அனைவரும் பாதுகாக்க வேண்டும், இந்திய மண்ணில் வசிப்பவர்கள் அனைவரும் இந்தியர் என்று கூற பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பாஜக அரசு இஸ்ஸாமியர்கள், இந்துகள் என்ன பிரிக்கிறார்கள்.. இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கு பகையை மூட்டுகிறார்கள்.. இப்படியிருந்தால் எப்படி நல்லிணக்கம் தழைக்கும்? இந்துக்களுக்கு, பார்சிகளுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், இஸ்ஸாமியர்களுக்கு இடையே பகையை மூட்டுகிறார்கள்..

அதானி அம்பானிகள்

இந்துகளும் இஸ்ஸாமியர்களும் சகோதரர்கள் என்று பாஜக தலைவர்கள் ஒருபோதும் பேசியதில்லை.. சகோதரத்துவத்தை சிதைத்து கொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பதை எப்படி ஏற்பது?

காஷ்மீருக்கு போகாமல், பிரதமர் பீகாருக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார். 26 பேர் இறந்துள்ளனர்.. அந்த உயிரிழப்புகளை விட தேர்தல் பிரச்சாரம் அவருக்கு முக்கியமா? அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கிய பிறகு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது என்றார்கள். ஆனால், அமைதி நீடிக்கவில்லை.. அதானி அம்பானிகள் ஜம்மு காஷ்மீரில் பங்களாக்கள் கட்டவும், வணிகம் செய்யவும்தான் 370 சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது.

திருமாவளவன் என்றால் இளக்காரம்

அமித்ஷா பதவி விலகுவது குறித்து கேட்கவும், ஸ்டாலினை பதவி விலக சொன்னீர்களா? என்று என்னை கேட்கிறார்கள்.. முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுவதாக இது உள்ளது.. சுப்பிரமணிய சுவாமி மோடியை பதவி விலக சொல்கிறார். ஆனாலும், அவரை பாஜகவினர் விமர்சிப்பதில்லை.. இதையே நான் சொன்னால் விமர்சிக்கிறார்கள்.. திருமாவளவன் என்றால் இளக்காரம் என்று நினைக்கிறார்கள்.

மதச்சார்ப்பின்மையை காப்பாற்ற மே 31ம் தேதி திருச்சியில் விசிக சார்பில் வக்பு சட்டத்திற்கு எதிராக மாநாடு நடத்தபட உள்ளது.. ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம் இருக்க வேண்டுமென்பது ஆர்எஸ்எஸ் கோட்பாடாக உள்ளது... பல மதங்கள், கலாச்சாரம், பல மொழி இருக்க கூடாது இந்தி எல்லோரும் பேச வேண்டும் என்பதுதான் இந்துத்துவா அஜெண்டா.. இந்துத்துவாவிற்கு எதிராக விசிக பேசுவதாக தோற்றத்தை பாஜக உருவாக்குகிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+