பீகாரில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள்? கூட்டணி வாரியாக விவரம்.. முழு ரிசல்ட் இதுதான்
பாட்னா: பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் 35 தொகுதிகளில் முடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தலுக்கான முழுமையான ரிசல்ட் வெளியாகி உள்ளது. எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களை பெற்றுள்ளன என்று இங்கு பார்க்கலாம்.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி பின்னடைவை சந்தித்து வந்தது. கடைசி வரை இந்த நிலை மாறவே இல்லை. மணிக்கு மணிக்கு பாஜக கூட்டணியின் முன்னிலை நிலவரம் அதிகரித்து சென்ற நிலையில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி சரிவை எதிர்கொண்டது.
இந்நிலையில் தான் இன்று இரவு 11 மணிக்கு தேர்தல் முடிவு முழுவதுமாக வெளிவந்தது. இதில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இருப்பினும் பாஜக, ஜேடியூ கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன்மூலம் பீகாரில் மீண்டும் பாஜகவின் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.
கட்சி வாரியாக பார்த்தால் பாஜக 89 தொகுதிகளில் வென்றுள்ளது. இதன்மூலம் பீகாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக மாறி உள்ளது. அதேபோல் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேபோல் பாஜகவின் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் இன்னொரு மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியாக பாஜகவின் கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளை வென்று அசத்தி உள்ளது.
மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இது ‛மகாகத்பந்தன்' கூட்டணிக்கு கடும் பின்னடைவாகும். ஏனென்றால் கடந்த 2020 தேர்தலில் ஆர்ஜேடி கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் இந்த முறை ஆர்ஜேடி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அசாதுதீன் ஓவைசியின் கட்சியை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியினர் 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 239 தொகுதிகளில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மொத்தம் 239 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அவரது வேட்பாளர் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications