பீகார் புதிய அமைச்சரவை! கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டிய பாஜக! பிளான் இதுதான்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக+ஜேடியு தலைமையிலான என்டிஏ கூட்டணி அபார வெற்றியை பெற்றது. இதனையடுத்து இன்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து ஒரு இஸ்லாமியர் உட்பட 26 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனையடுத்து நவ.14ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது.

இதனை தொடர்ந்து இன்று நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பீகார் மாநிலத்தை பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற தொகுதிகளை நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு பெறவில்லை. இந்தமுறையும் சொதப்பினால், அவரை கைவிட்டுவிட்டு பாஜகவிலிருந்து ஒருவரை முதல்வராக அமர்த்துவது என்று கட்சி யோசித்திருந்தது. ஆனால் ஜேடியு இந்த முறை பெரிய வெற்றியை பதிவு செய்தது. எனவே நிதிஷ்குமார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மொத்தம் 26 அமைச்சர்கள்
நிதிஷ்குமார் இன்று 10வது முறையாக மாநில முதலமைச்சராகப் பதவியேற்று, புதிய சாதனை படைத்துள்ளார். இவருடன் 26 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழா பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.
புதிய அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றனர். அமைச்சரவையில் பாரதிய ஜனதாவிலிருந்து 14 அமைச்சர்களும், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 8 அமைச்சர்களும், லோக் ஜனசக்தி கட்சியில் (ராம் விலாஸ்) இருந்து 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவிலிருந்து தலா ஒரு அமைச்சரும் இடம்பெற்றுள்ளனர்.
சாதி வாரியாக பிரதிநிதித்துவம்
பதவியேற்ற முக்கிய அமைச்சர்களில் மங்கல் பாண்டே, அசோக் சௌத்ரி, லேசி சிங், ஷ்ரேயசி சிங், ரமா நிஷாத், மதன் சஹானி ஆகியோர் அடங்குவர். முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமன் மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் மகன் தீபக் பிரகாஷ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் 3 பெண் அமைச்சர்களும், 3 புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தலித் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம்
அமைச்சரவையின் சமூகப் பிரதிநிதித்துவத்தைப் பொருத்தவரை, உயர் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து தலா 8 அமைச்சர்களும், தலித் சமூகத்திலிருந்து 5 அமைச்சர்களும், ஒரு முஸ்லிம் சமூக பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார், அசோக் சௌத்ரி, லக்விந்தர் ரோஷன், சஞ்சய் பாஸ்வான், சந்தோஷ் சுமன் ஆகிய ஐந்து பேர் அமைச்சரவையில் உள்ளனர்.
வைசிய சமூகத்திலிருந்து திலீப் ஜெயஸ்வால், நாராயண் பிரசாத், பிரமோத் குமார், அருண் சங்கர் பிரசாத் ஆகியோரும், ராஜ்புத் சமூகத்திலிருந்து ஷிரேயசி சிங், சஞ்சய் சிங், சஞ்சய் சிங் டைகர், லேசி சிங் ஆகியோரும், குஷ்வாஹா சமூகத்திலிருந்து சாம்ராட் சௌத்ரி, சுரேந்திர மேத்தா, தீபக் பிரகாஷ் ஆகியோரும், குர்மி சமூகத்திலிருந்து ஸ்ரவன் குமார் என்பவரும் அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.
பிரமாண்ட விழா
அதேபோல பூமிஹார் சமூகத்திலிருந்து விஜய் சௌத்ரி, விஜய் சின்ஹா, நிஷாத் சமூகத்திலிருந்து மதன் சஹானி, ரமா நிஷாத், யாதவ் சமூகத்திலிருந்து ராம்கிரிபால் யாதவ், பிஜேந்திர யாதவ் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பிராமண சமூகத்திலிருந்து மங்கல் பாண்டே, காயஸ்தா சமூகத்திலிருந்து நிதின் நவின், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஜமா கான் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அண்டை மாநிலங்களான உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் ஷர்மா, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் ஷர்மா, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, பிரேம்சந்த் பைர்வா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பாஜகவின் திட்டம் என்ன?
நிதிஷ்குமாரை கழற்றிவிட்டுவிட்டு, தனியாக பீகாரை ஆள்வதுதான் பாஜகவின் திட்டம். எனவேதான் நிதிஷ்குமாருக்கும், சிராக் பஸ்வானுக்கும் சண்டை இருந்தபோதும் கூட, சிராக்கை அழைத்து வந்து கூட்டணியில் சேர வைத்தார் அமித்ஷா. கடந்த தேர்தலில் பாஜக 74 இடங்களை வென்றபோது, ஜேடியு வெறும் 43 இடங்களைதான் வென்றிருந்தது. எனவே ஜேடியு-க்கு மாற்றாக லோக் ஜனசக்தி கட்சியை (ராம் விலாஸ்) வளர்த்து கைக்குள் போட்டுக்கொள்ளலாம் என்று பாஜக எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்த முறை ஜேடியு நல்ல ஸ்கோர் செய்திருந்தது. ஜேடியு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்கிற சூழல் உருவானதால், நிதிஷ்குமாரை ஒதுக்க முடியவில்லை.
இருப்பினும் ஆட்சி அதிகாரத்தில் நிதிஷின் கை ஓங்குவதை பாஜக விரும்பவில்லை. எனவேதான் மொத்தம் இருந்த 26 அமைச்சர்களில் ஜேடியு-க்கு வெறும் 8 அமைச்சர் பதவியை ஒதுக்கியிருக்கிறது. பாஜக நினைக்கும் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த இதர சிறிய கட்சிகளை கையில் போட்டுக்கொள்ள அக்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருக்கிறது. சிராக் கட்சிக்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சிராக்கை நிதிஷால் கட்டுப்படுத்த முடியாது. அமித்ஷாவால் முடியும். அதேபோலத்தான் மற்ற இரண்டு சிறிய கட்சிகளும்.
இதை கணக்கில் கொண்டு புதிய அமைச்சரவை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக பாஜக கைக்குள் 18 அமைச்சர்களை வைத்திருக்கிறது. இனி பாஜக கொண்டு வரும் எந்த திட்டத்தையும் நிதிஷ்குமாரால் தடுக்க முடியாது. வெளியே இருந்த செய்ய முடியாத வேலையை உள்ளிருந்து செய்ய பாஜக திட்டமிட்டிருக்கிறது.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications