Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய் மகாராஷ்டிரா.. பீகார் முதல்வர் சேரின் மீது பாஜகவுக்கு ஒரு கண்! ஷிண்டே நிலை தான் நிதிஷுக்குமா?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக ஜேடியூ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நிதீஷ் குமார் தான் தற்போதைக்கு முதல்வராக போகிறார் என சொல்லப்பட்டாலும் பாஜகவும் முதல்வர் கனவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகாராஷ்டிராவை போல பீகாரிலும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை முதல்வராக திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது துணை முதல்வராக இருக்கும் சாம்ராட் சவுத்ரி பீகார் முதல்வர் ரேஸில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக-ஜேடியூ வலுவாக இருக்கும் நிலையில், தொடர்ந்து ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 90க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், ஜேடியூ 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன.

Nitish kumar Bihar Election 2025 bjp

இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது பெரிய விவாதமாகி உள்ளது. கூட்டணியில் பாஜகவும் ஜேடியூவும் அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், முதல்வர் பதவியைப் பற்றி எந்தத் தெளிவான தகவலும் இதுவரை இல்லை.

பீகார் தேர்தல் முடிவுகள்

அதற்கு ஒரு காரணமும் உண்டு. பாஜக கூட்டணியில் முன்னணியில் உள்ளது என தேர்தல் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், ஜேடியூ தனது எக்ஸ் பக்கத்தில், "நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார், இருக்கிறார், தொடர்ந்து இருப்பார்" என்ற பதிவினை போட்டது. ஆனால், அந்த பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பீகார் முதல்வர் போட்டி

ஜேடியூ ஏன் பதிவை நீக்கியது? பாஜகவுடன் ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டதா? முதல்வர் பதவிக்கு பாஜக ஆசைப்படுகிறதா? என்பது தான் தற்போது பீகார் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படும் கேள்விகள். இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஜேடியூ தலா 101 இடங்களில் போட்டியிட்டன. ஆனால், முடிவுகளின்படி பாஜகவுக்கு அதிக சீட்டுகள் கிடைத்துள்ளன. பாஜக 90+ இடங்கள் முன்னிலையும், ஜேடியூ - 80+ இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிக இடங்கள் பெற்றிருப்பதால் முதல்வர் பதவியை பாஜக கேட்கக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதல்வர் நிதிஷ் குமார்

இதற்கு முன்னர் மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தான் கூட்டணி இருந்தாலும், இறுதியில் பாஜக அதிக இடங்களில் வென்றதால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அதே யுக்தியை பாஜக பீகாரிலும் பயன்படுத்தலாம் என்பதே தற்போதைய பரபரப்புக்கு காரணம் இந்நிலையில், பாஜக சார்பில் துணை முதல்வராக உள்ள சாம்ராட் சவுத்ரி முதல்வர் வேட்பாளராக வரலாம் என்ற பேச்சும் உள்ளது.

சாம்ராட் சவுத்ரி

பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும் சூழலில், சாம்ராட் சவுத்ரியின் பெயர் அதிகம் பேசப்படுகிறது. அதே நேரத்தில் நிதிஷ் குமார் கடந்த 20 ஆண்டுகளாக பீகார் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கூட்டணிகள் மாறினாலும், அரசியல் சூழ்நிலை எத்தனை மாறினாலும், இறுதியில் முதல்வர் ஆசனத்தை நிதிஷ்தான் பிடிப்பது என்ற ஒரு நிலையான அரசியல் உண்மை பீகாரில் இருக்கிறது. தற்போது வரை அவர் தான் முதல்வர் என பேசப்படுகிறது. ஆனால் இந்த முறை பாஜக எண்ணிக்கையில் மிக வலுவாக உள்ளதால், நிலைமை மாற வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+