பிரதமரை கொல்ல சதி.. 2027க்குள் இஸ்லாமிய ஆட்சி துண்டு பிரசுரம்! தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியை குறி வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை இப்போது மிகவும் பதற்றமான ஒன்றாக மாறி உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்கின்றனர்.

இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். அதேபோல உள்நாட்டிலும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள்

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் பயங்கரவாதிகள் செல் ஒன்றை அம்மாநில போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே இந்த பயங்கரவாத செல்களின் இலக்காக இருந்தது என்றும் பீகார் போலீசார் தெரிவித்தனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பீகார் வரும்போது, அவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

 பிரதமர் மீது தாக்குதல் நடத்த சதி

பிரதமர் மீது தாக்குதல் நடத்த சதி

இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் அதர் பர்வேஸ் மற்றும் எம்டி ஜலாலுதீன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இவர்களுக்குப் புல்வாரி ஷெரீப் பகுதியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியை குறிவைத்துத் தாக்குதல் நடத்த ரகசிய ஆலோசனைக் கூட்டங்களும் நடந்துள்ளன. இதையடுத்து புல்வாரி ஷெரீப் பகுதியிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

 இஸ்லாமிய ஆட்சி

இஸ்லாமிய ஆட்சி

அந்த சோதனையின் போது, போலீசார் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அவற்றில் ஒன்றில் '2047: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்' எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும், 25 துண்டுப் பிரசுரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரீப் பகுதியில் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருவதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜூலை 11ஆம் தேதி நயா தோலா பகுதியில் போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தி ரெய்டில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

மேலும், இந்த பகுதிக்குச் சென்ற பெரும்பாலான இளைஞர்கள், கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டப் பயிற்சி பெற அவர்கள் அங்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளில் இருந்து பணம் பெற்று, நாட்டில் தேசவிரோத பிரச்சாரங்களை நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 ஓய்வு பெற்ற போலீஸ்

ஓய்வு பெற்ற போலீஸ்

இது தொடர்பாகப் புல்வாரி ஷெரீப் உதவி காவல் கண்காணிப்பாளர் ( ஏஎஸ்பி) மணீஷ் குமார் கூறுகையில், "கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ஜார்கண்ட் போலீஸ் அதிகாரி ஆவார். அவர்களுக்குப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது. கைது செய்யப்பட்ட ஜலாவுதீன் என்பவர் இதற்கு முன்பு இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (SIMI) உடன் தொடர்புடையவர்

 பகீர் தகவல்

பகீர் தகவல்

அவர்கள் உள்ளூர் மக்களுக்கு வாள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்துவது எப்படி என்று பயிற்சி அளிக்கிறார்கள். வகுப்புவாத வன்முறையைத் தூண்டினர். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாட்னாவில் அவர்களைச் சந்திக்க வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் போலி பெயர்களில் ஹோட்டல்களில் தங்கி பயிற்சி பெற்று உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+