பீகாரில் அடுத்து என்டிஏவா? இந்தியாவா? நாளை வாக்கு எண்ணிக்கை! 501 கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 14) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இரு கட்ட வாக்குப்பதிவிலும் சேர்த்து சுமார் 66.9 சதவீதம் வாக்குப்பதிவை பதிவு செய்து பீகார் மக்கள் வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், ஆட்சிமையக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளை கொண்டுள்ள பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA) மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் (INDIA Bloc) இடையே கடுமையான போட்டி இருந்தது.

தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பா.ஜ.க. முக்கிய கூட்டணிக் கட்சிகளாக உள்ளன. அதே நேரம் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான INDIA கூட்டணி மிகப்பெரிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
பீகார் தேர்தல் முடிவு
தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6-ம் தேதி மற்றும் நவம்பர் 11-ம் தேதி நடைபெற்றது; முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் 65 சதவீதம் வரை தொட்டது. அதன்பின், இரண்டாம் கட்டத்திலேயே மேலும் வாக்குகள் அதிகமாக பதிவு ஆகி, 122 தொகுதிகளில் 68.8 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியது. இந்தத் தேர்வின் விசேஷம் என்னவென்றால், பெண்கள் வாக்குப்பதிவு விகிதம் குறிப்பிடத்தக்கது அளவு உயர்ந்துள்ளது தான். பொதுவாக வாக்களிக்க எண்ணமில்லாமலும், அரசியல் காரணங்களாலும் பீகார் வழக்கமாக குறைந்த அளவிலேயே பெண்கள் வாக்களிப்பார்கள்.
வாக்கு சதவீதம்
ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பீகாரில் பெண்கள் 71.6 பேர் சதவீதம் வாக்களித்துள்ளனர். ஆண்கள் வாக்குப்பதிவு சதவீதம் 62.8 ஆகவுள்ளது. பிரச்சாரம், கிராமப்புற-நகர்ப்புற ஓட்டு வேற்றுமைகள், மற்றும் கட்சித் வாக்குறுதிகள் காரணமாக பெண்கள் அதிகளவு வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் எண்ணிக்க மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மையங்களில் துணைப் ராணுவ வீரர்கள், உள்ளூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, நேபாள எல்லை அருகிலுள்ள மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சுட்டிக்காட்டுகின்றன. மொத்தம் 243 இடங்களில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ கூட்டணிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியமைக்குமா? என்பது பகல் 12 மணிக்கெல்லாம் தெளிவாக தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக - ஜேடியூ
அதே நேரத்தில், தேர்தல் முடிவை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால், பாஜகவும் கூட்டணி கட்சிகளும் உற்சாகத்தில் உள்ளனர். பாட்னாவில் வெற்றிக்குப் பிறகு தொண்டர்களுக்கு வழங்க 501 கிலோ லட்டுவை பாஜகவினர் ஆர்டர் செய்துள்ளதே இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எதிர்கால பீகார் மாநிலத்தின் அரசியல் நிலவரம் எப்படி மாறுமோ, அதற்கான முதல் அறிகுறிகள் நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிடும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications