பீகார் தேர்தல் முடிவுகள் 2025 LIVE: நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்
பாட்னா: மாலை 5 மணி நிலவரப்படி பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 34 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 91 தொகுதிகளிலும், ஜேடியு 83 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் காண இணைந்திருங்கள்.

காங்கிரஸ் கட்சி மொத்தம் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை 19 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை ஒற்றை இலக்கத்துக்கு சரிந்துள்ளது. மொத்தமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 8.72 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது.
பீகார் தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் நோட்டாவுக்கு மொத்தம் 1.82 சதவீதம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் எதிர்க்கட்சிகளின் ‛மகாகத் பந்தன்’ கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (பெற்ற ஓட்டு 0.75 சதவீதம்)மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (பெற்ற ஓட்டு 0.61 சதவீதம்) நோட்டாவை விட குறைந்த அளவில் ஓட்டுகள் வாங்கி உள்ளன. இது மட்டுமின்றி ஏஏஏபி கட்சி 0.30 சதவீதம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1.61 சதவீதம், என்சிபி 0.03 சதவீதம், என்பிஇபி கட்சி 0.01 சதவீதம் ஓட்டுகள் பெற்று நோட்டாவை விட பின்தங்கி உள்ளனர். இந்த தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி 1.86 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இது நோட்டாவை விட 0.04 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.
SIR நடவடிக்கைக்கு வலிமை கிடைத்துள்ளது - மோடி
பீகார் தேர்தல் வெற்றியையொட்டி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு, ‛‛தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வலிமையான நம்பிக்கையை வைத்துள்ளனர். தேர்தலில் அதிக வாக்கு பதிவானது இதனை உறுதி செய்துள்ளது. . இது தேர்தல் ஆணையத்துக்கு வலிமையை தந்துள்ளது. பீகாரில் மறுவாக்கு பதிவுக்கான தேவை இல்லை. பீகாரில் இம்முறை மறுவாக்குப்பதிவு எதுவும் நடைபெறவில்லை. பீகாரில் SIR நடவடிக்கைக்கு இளைஞர்கள் வலிமையை தந்துள்ளனர். பீகாரில் இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். முதன் முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறை இல்லை. மக்களின் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளது’’ என்றார்.
பீகார் தேர்தல் வெற்றியையொட்டி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு, ‛‛ பீகார் தேர்தலில் கிடைத்தது ஜனநாயகத்துக்கான வெற்றி. அதிக வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த வெற்றி. நிதிஷ் குமாரின் தலைமை சிறப்பாக நடந்தது. பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மகளிர், இளைஞர்கள் தான் என்டிஏவின் அடுத்த இலக்கு. தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வலிமையான நம்பிக்கையை வைத்துள்ளனர். தேர்தலில் அதிக வாக்கு பதிவானது இதனை உறுதி செய்துள்ளது. . இது தேர்தல் ஆணையத்துக்கு வலிமையை தந்துள்ளது’’ என்று கூறினார்.
தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி - மோடி
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்துக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியது. எங்களின் சாதனையை பாராட்டி மாநிலத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான எங்களின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் மக்கள் வாக்களித்தனர். இந்த இணையற்ற வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த சிராக் பஸ்வான், ஜித்ன ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு வாழ்த்துகள்’’ என கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமித்ஷா கூறுகையில், ‛‛அரசியல் செயல்திறன் அடிப்படையில் மக்கள் தங்களின் வாக்குகளை தந்துள்ளனர். நரேந்திர மோடி, நிதிஷ் குமார் மற்றும் என்டிஏ கூட்டணியின் அனைத்து தலைவர்கள், தொண்டர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அயராது உழைத்து வெற்றியை பெற்று தந்த பீகார் மாநில பாஜக பூத் அளவிலான தொண்டர்களுக்கு சல்யூட் செய்கிறேன். மோடி தலைமையிலான ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து வெற்றியை பரிசளித்த உங்களுக்கு நாங்கள் இன்னும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றுவோம். இதனை பீகார் மாநில தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் உறுதியாக கூறுகிறேன்’’என கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹேப்பியாகி உள்ளார். இதுதொடர்பாக அவர் பீகாரை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்று நினைத்த ஒவ்வொரு பீகார் மக்களின் வெற்றி இதுவாகும். ஜங்கிள் ராஜ் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை கடைப்பிடிப்போர் எந்த வேடமிட்டு வந்தாலும்அவர்களுக்கு (மறைமுகமாக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸை சொல்கிறார்) கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்’’ என கூறியுள்ளார்.
வெற்றியின் விளிம்பில் தேஜஸ்வி யாதவ்
ஆர்ஜேடி கட்சியின் தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். மொத்தம் உள்ள 30 சுற்றுகளில் 29 சுற்று முடிவில் 1,16,467 வாக்குகள் பெற்று 13,880 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜகவேட்பாளர் சதீஷ்குமார் 1,02,587 வாக்குகள் பெற்றுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் 10,000 வாக்குகள் முன்னிலை
பீகார் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டுள்ள மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தற்போது 10,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 24-வது சுற்று முடிவில், 97,345 வாக்குகள் பெற்றுள்ள தேஜஸ்வி யாதவ் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை விட 10,276 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை
பீகார் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டுள்ள மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தற்போது முன்னிலை பெற்றுள்ளார். 20-வது சுற்று முடிவில், 77,646 வாக்குகள் பெற்றுள்ள தேஜஸ்வி யாதவ் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை விட 3,523 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு
பீகார் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போட்டியிட்டுள்ள 61 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே தற்போது முன்னிலையில் உள்ளது. ஆரம்பத்தில் 5 முதல் 6 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
Top Fight - ரகோபூர்
சதீஷ் குமார்
(பாஜக)
Leading
தேஜஸ்வி யாதவ்
(ஆர்ஜேடி)
Trailing
பீகார் மக்களுக்கு நன்றி
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்ற நிலையில், பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். "பீகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்த விதம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் செய்யப்பட்ட வளர்ச்சிக்கு பீகார் மக்கள் தங்கள் ஆதரவைக் காட்டியுள்ளனர் என்று கூறினார்.
#WATCH | #BiharAssemblyElections | Nagpur | As NDA crosses the majority mark in Bihar, Union Minister Nitin Gadkari says, "The way people of Bihar have given support to the NDA is historic. The people of Bihar have shown their support for the development done by the double-engine… pic.twitter.com/F6gpTIZVjX
— ANI (@ANI) November 14, 2025
தேஜஸ்வி யாதவுக்கு பெரும் பின்னடைவு
பீகார் சட்டசபை தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி கட்சி தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். 10வது சுற்று முடிவில், 36950 வாக்குகள் மட்டுமே பெற்று, 3,230 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சதீஷ்குமார் 40,180 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
தேஜஸ்வி யாதவுக்கு பெரும் பின்னடைவு
பீகார் சட்டசபை தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி கட்சி தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். 10வது சுற்று முடிவில், 36950 வாக்குகள் மட்டுமே பெற்று, 3,230 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சதீஷ்குமார் 40,180 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
200 தொகுதிகளில் முன்னிலை
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே 200 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியூ 80 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் ஆர்ஜேடி 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
50% வாக்குகளை நெருங்கும் என்டிஏ கூட்டணி
பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 196 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த கூட்டணி 50 சதவீத வாக்குகளை நெருங்கியுள்ளது. கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியு 19 சதவீத வாக்குகளையும், பாஜக 21 சதவீத வாக்குகளையும், எல்ஜேபி 5.3 சதவீதம் என கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 23% (மற்ற கட்சிகளுடன் அதிகம்) வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
காங்கிரசை முந்திய ஏஐஎம்ஐஎம்
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் படி, காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் மகாகத்பந்தன் கூட்டணி 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் கூட்டணியில் உள்ள அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி காங்கிரசை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதாவது ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 6 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
”மக்களுக்கு மகளாக சேவை செய்வேன்”
அலிநகரில் முன்னிலை வகித்து வரும் பாடகியும் பாஜக வேட்பாளருமான மைதிலி தாகூர், ”இது ஒரு கனவு போல இருக்கிறது. மக்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகப் போகிறேன். நான் எனது தொகுதி வளர்ச்சிக்காக முழு முயற்சியையும் கொடுப்பேன். என் மக்களுக்கு அவர்களின் மகளாக சேவை செய்வேன். இப்போது எனக்கு தெரிவது அலிநகரம் மட்டுமே; அவர்களுக்காக நான் எப்படி வேலை செய்யலாம் என்பதை பற்றி நினைக்கிறேன்’” என்று கூறினார்.
#WATCH | #BiharElection2025 | Singer and BJP candidate Maithili Thakur, who is leading from Alinagar, says, "This is like a dream. People have a lot of expectations of me... This will be my first term as an MLA, and I will do my best for my constituency... I will serve my people… pic.twitter.com/eRPaWqvzIE
— ANI (@ANI) November 14, 2025
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 197 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனை பாட்னாவில் நிதிஷ் குமார் கட்சி அலுவலகம் முன் அவரது ஆதரவாளர்கள் மேள, தாளங்களுடன் கொண்டாடி வருகிறார்கள்.
#WATCH | Bihar: Celebrations continue at the JD(U) office in Patna as NDA continues its comfortable lead in #BiharElections. pic.twitter.com/Ti0E3vyIji
— ANI (@ANI) November 14, 2025












Click it and Unblock the Notifications