2011ல் தமிழ்நாட்டில் செய்த சொதப்பலை பீகாரில் ரிப்பீட் செய்த காங்கிரஸ்.. அனுபவிக்கும் தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 7 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிப்பது இந்தியா கூட்டணி ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட 2011ல் தமிழ்நாட்டில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வென்றதற்கு சமமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. என்டிஏ கூட்டணி 190 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மகாகட்பந்தன் கூட்டணி 49 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. என்டிஏ கூட்டணி vs மகாகட்பந்தன் கூட்டணி என்று இருந்த போட்டி, தற்போது ஜேடியூ - பாஜக என்று மாறி இருக்கிறது.

இதில் மகாகட்பந்தன் கூட்டணி தரப்பில் ஆர்ஜேடி 35 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வெறும் 7 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் இருப்பது இந்தியா கூட்டணி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவான அளவில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடுகள், 2011 தமிழக சட்டசபைத் தேர்தலை பலருக்கும் நினைவுப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 63 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
அப்போது காங்கிரஸ் கட்சி வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் திமுக கூட்டணியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. இதற்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பு சிதைந்து கொண்டே வந்தது காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது பீகாரிலும் இப்படியான நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
ஏற்கனவே மதம் மற்றும் சாதி ரீதியிலான அரசியலை பாஜக மற்றும் ஜேடியூ கட்சிகள் முன்னெடுத்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை கையில் எடுத்தனர். அதேபோல் பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான பூத் கமிட்டி உறுப்பினர்களே இல்லை என்றும் விவரம் அறிந்த சிலர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்











Click it and Unblock the Notifications