200 தொகுதிகளில் வெல்லும்.. பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றியை துல்லியமாக கணித்த Poll Diary!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்புகளில் என்டிஏ கூட்டணி 184 முதல் 209 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று Poll Diary துல்லியமாக கணித்திருக்கிறது. ஏற்கனவே டெல்லி சட்டசபைத் தேர்தலின் போது இதே நிறுவனம் பாஜக 42 முதல் 50 தொகுதிகளில் வெல்லும் என்று கணித்திருந்தது. அப்போது பாஜக 48 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் என்டிஏ கூட்டணி 204 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. அதில் பாஜக 92 தொகுதிகளிலும், ஜேடியூ 82 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. என்டிஏ கூட்டணியின் இந்த வெற்றி பாஜகவினர் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்ஜேடி வலிமையாக இருக்கும் இடங்களில் கூட என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். இவ்வளவு ஏன், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் சில சுற்றுகளில் பின் தங்கி இருக்கிறார். பீகார் தேர்தலுக்கு முன்பாக என்டிஏ கூட்டணி 160 முதல் 180 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை பிடிக்கும் என்று அமித்ஷா கூறி இருந்தார்.
அதற்கேற்ப தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்புகளில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டிருந்தது. பெரும்பாலான கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் என்டிஏ கூட்டணி 147 முதல் 167 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறி இருந்தனர். அதேபோல் இந்தியா கூட்டணி 70 முதல் 100 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருந்தனர்.
ஆனால் Poll Diary மட்டும் என்டிஏ கூட்டணி 184 முதல் 209 தொகுதிகள் வரை என்டிஏ கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று கணித்திருந்தது. அதேபோல் இந்தியா கூட்டணி 32 முதல் 49 வரை வெல்லவும், மற்றவை 1-5 தொகுதிகள் வரை வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது Poll Diary கருத்துக் கணிப்பு மெய்யாகி இருக்கிறது.
ஏற்கனவே டெல்லி சட்டசபைத் தேர்தலின் போதும் Poll Diary கருத்துக் கணிப்பு மெய்யாகியது. என்டிஏ கூட்டணி 42 முதல் 50 தொகுதிகள் வரை வெல்லும் என்று கூறி இருந்த போது, பாஜக 48 தொகுதிகளில் வென்றது. ஆம் ஆத்மி கட்சி 18 முதல் 25 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணித்திருந்தது. அதற்கேற்ப ஆம் ஆத்மி கட்சியும் 22 தொகுதிகளில் வென்றது.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்











Click it and Unblock the Notifications