Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் தேர்தல் முடிவுகள்: என்டிஏவின் வெற்றியும்.. இந்தியா கூட்டணியின் தோல்வியும்! ரவுண்டப்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி தங்களின் 2010 ஆம் ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது.

தேர்தலில் வெற்றி, தோல்விகளைத் தீர்மானித்த முக்கிய நபர்கள், கட்சிகள் மற்றும் வாக்காளர் குழுக்கள் பற்றிய விரிவாக பார்ப்போம்.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

1. நிதிஷ் குமாரின் தலைமை:

20 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த நிதிஷ் குமார், ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை மீறி, தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 85 இடங்களைப் பெற்றுத் தந்துள்ளார். என்டிஏ-வின் மொத்த இடங்கள் 202 ஆக உயர்ந்ததால், நிதிஷ் குமார் ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றி, பீகாரின் அடுத்த தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தேஜஸ்வி யாதவ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த 'இளைஞர்கள் vs அனுபவமிக்கவர்கள்' என்ற வாதம் வாக்குகளாக மாறவில்லை.

2. சிராங் பாஸ்வான்:

இந்தத் தேர்தலில் சிராங் பாஸ்வான் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியை நிரூபித்திருக்கிறார். கடந்த 2020ல் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று, கிட்டத்தட்ட 6% வாக்குகளைப் பெற்றிருந்த அவரது லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இம்முறை போட்டியிட்ட 29 இடங்களில் 19 இல் வெற்றி பெற்று தனது ஆதரவை வாக்குகளாக மாற்றியுள்ளது. பாஸ்வான் சமூக வாக்குகளை ஒருங்கிணைத்ததும், இளம் வாக்காளர்கள் மற்றும் தலித் சமூகத்தினரிடையே சிராங்கின் செல்வாக்கும் இதில் முக்கியப் பங்காற்றின.

3. அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி:

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி பீகாரின் சீமாஞ்சல் பிராந்தியத்தில் வலுவான வெற்றியை பதிவு செய்ததுள்ளது. AIMIM ஜோகிஹாட் (அராரியா), கோச்சதாமன் (கிஷன்கஞ்ச்), அமோர் (பூர்ணியா) மற்றும் பைசி (பூர்ணியா) ஆகிய நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2020 தேர்தலிலும் இக்கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

4. பெண் வாக்காளர்கள்:

2025 தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பெண் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். பீகார் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இவர்களின் பங்கேற்பு என்டிஏ-வுக்குச் சாதகமாக முடிவை மாற்றியமைத்தது. பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் ஆண்களை விட கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் அதிகமாக இருந்தது. ரூ. 10,000 "முதலமைச்சர் மகளிர் ரோஜ்கர் யோஜனா" போன்ற பெண்களை இலக்காகக் கொண்ட நலத்திட்டங்கள், ஏழை மற்றும் பின்தங்கிய சமூகத்தினரிடையே நிதிஷ்குமாருக்கான ஆதரவாக மாறியது.

5. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்:

என்டிஏ-வின் சிறிய கூட்டணிக் கட்சிகளான ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபந்திர குஷ்வாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் சிராங் பாஸ்வானின் LJP(RV) ஆகியவை தேர்தலில் வலுவாக களம் கண்டிருக்கின்றன. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா போட்டியிட்ட 6 இடங்களில் 5 இடங்களிலும், LJP(RV) 19 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தோல்வி கண்டவர்கள்:

1. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி):

எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளராகக் முன்னிறுத்தப்பட்ட தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாருக்கு எதிரான அதிருப்தியை வாக்குகளாக மாற்ற தவிரிவிட்டார். இருப்பினும், ஆர்ஜேடி கோட்டையாக கருதப்படும் ராகோபூர் தொகுதியில் தனது வெற்றியை தக்க வைத்துக்கொண்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு 22 இடங்களைப் பெற்றது. 2020ல் 75 தொகுதிகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2010க்கு பிறகு இது ஆர்ஜேடியின் இரண்டாவது மோசமான தேர்தல் தோல்வியாகும். ஆனால் இந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சி, வேறெந்த கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.

2. ராகுல் காந்தியின் தலைமை:

காங்கிரஸ் மீண்டும் பீகாரில் கடும் தோல்வியடைந்திருக்கிறது. இந்த முறை வெறும் 6 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. 2020 சட்டமன்ற தேர்தலிலிருந்து இந்த தோல்வி தொடர்கிறது. 2020ல் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வென்றது, இதனால் மகாபந்தன் கூட்டணியின் வெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது.

'வாக்காளர் அதிகார் யாத்ரா', 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகள் மற்றும் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் என ராகுல் காந்தி தீவிரமாக பணியாற்றிய போதும் கட்சி கடும் தோல்வியடைந்திருக்கிறது.

3. பிரசாந்த் கிஷோரின் தலைமை:

இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் வியூக நிபுணராகக் கருதப்படும் பிரசாந்த் கிஷோர், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி கண்டவர்களில் ஒருவராக மாறியுள்ளார். பீகார் முழுவதும் 2 ஆண்டுகளாக நடந்து சென்று பிரச்சாரம் செய்திருந்தார். இருப்பினும் அவரது ஜன சுராஜ் கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. NOTA-வை விடக் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் வளர்ச்சி சார்ந்த அணுகுமுறை எடுபடவில்லை. இந்த தேர்தலில் பிராசாந்த் கிஷோர் நேரடியாக களமிறங்கியிருந்தால் போட்டி தீவிரமாக இருந்திருக்கும். ஆனால் கிஷோர் களமிறங்கவில்லை. இது கட்சியின் மீதான நம்பிக்கையை பாதித்தது.

4. முகேஷ் சஹானி:

சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஒரு முக்கிய போட்டியாளராகக் கருதப்பட்ட முகேஷ் சஹானி, கடும் பேரத்திற்குப் பிறகு மகாபந்தனால் துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அவரால் வெற்றியை கொடுக்க முடியவில்லை. அவரது விகாஸ்ஷீல் இன்சான் கட்சி சாதி செல்வாக்கை வாக்குகளாக மாற்ற தவறிவிட்டது.

5. இந்தியா கூட்டணி:

மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி பலத்தை பரிசீலிக்கும் தேர்தலாக பீகார் தேர்தல் கருதப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்தான் மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்கப்படும். ஆனால் பீகாரில் இந்தியா கூட்டணி கடும் தோல்வியடைந்திருப்பதால், தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறையலாம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+