விருந்துக்கு போனவர்களுக்கு நேர்ந்த கதி.. கங்கையில் படகு விபத்தில் 11 பேர் பலி! நள்ளிரவில் சோகம்!
பாட்னா: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக படகில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில் மீட்பு பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் மறுகரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக படகு ஒன்றில் சுமார் 20 பேர் பயணம் செய்து கொண்டிருந்தன.ர் அப்போது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் மீட்பு படையினருடன் இணைந்து உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்/ முதற்கட்ட தகவல்கள் படி படகில் பயணித்த 20 பேரில், குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படகு விபத்தில் சிக்கி யாரேனும் மாயமாகி உள்ளார்களா என்பதை கண்டறிவதற்காக தொடர்ந்து தேடுதல் பணியானது நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் வெளியானகாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ல அவர்," வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் பகுதியில் படகு விபத்தில் அப்பாவி உயிர்கள் பறிபோன செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை அவர்களுக்குக் கடவுள் வழங்க வேண்டும்" எனக் குறியுள்ளார்.
விபத்து தொட்ர்பாக பதிவிட்டுள்ள பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்," ரகோபூர் தியாரா பகுதியில் படகு கவிழ்ந்தது தொடர்பான துயரமான செய்தி கிடைத்துள்ளது. ஆற்றில் மூழ்கியவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது மேலும் சோகத்தை தருகிறத். உள்ளூர் மக்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மீட்பு, நிவாரணம் மற்றும் சிகிச்சைப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
கங்கை ஆற்றில் ஏற்பட்ட இந்தப் படகு விபத்து பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனும் தனது இரங்கலித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் தைரியத்தையும் அவர்கள் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
