Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த பதவி மட்டும் கேட்காதீங்க.. நிதிஷிடம் பாஜக கறார்! விட்டு கொடுக்க விரும்பாத ஜேடியூ.. அதிரும் பீகார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து, அம்மாநில முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் பதவி ஏற்க உள்ளார். தற்போது அமைச்சரவை பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், சபாநாயக பதவியை விட்டு கொடுக்க பாஜக மறுத்து வருகிறதாம். அதே நேரத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் சபாநாயகர் பதவியை பாஜகவிடம் விட்டுக்கொடுக்க கூடாது என நினைப்பதால் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் பாஜக- ஜேடியூ கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைத்தது.

bjp-and-jdu-lock-horns-over-speaker-post-ahead-of-bihar-govt-formation

நிதிஷ் குமார் பதவியேற்பு விழா

காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தலில் படு தோல்வியை சந்தித்தது. தேர்தல் வெற்றியால் பாஜக உற்சாகத்தில் உள்ளது. வரும் 20 ஆம் தேதி நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார். 10-வது தடவையாக நிதிஷ் குமார் முதல்வர் ஆக உள்ளார். பாட்னா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணியின் முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

புதிய கேபினட்

இதன் காரணமாக பாட்னாவில் உள்ள காந்தி மைதானம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் புதிய கேபினட்டில் பாஜகவிற்கு 16 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு 14 இடங்களும் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இரு கட்சிகளிலும் தலா 3 புதுமுகங்களும் பதவி ஏற்கிறார்கள். லோக் ஜனசக்தி கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகளும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் அளிக்கப்படுகிறது.

சபாநாயகர் பதவி

இதற்கிடையே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படும் சபாநாயகர் பதவியை கைப்பற்ற பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே தங்களுக்கே சபாநாயகர் பதவி வேண்டும் என்று அடம் பிடிப்பதால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக எந்த விலை கொடுத்தாவது சபாநாயகர் பதவியை மட்டும் கைப்பற்றிவிட வேண்டும் என கடும் பாடுபடும் பாஜக, அதற்கான காய்களை நகர்த்தி வருகிறது.

இதற்கு முந்தைய சட்ட சபையில், பாஜகவின் நந்த் கிஷோர் யாதவ் சபாநாயகராகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நரேந்திர நாராயனன் யாதவ் துணை முதல்வராகவும் இருந்தனர். சபநாயகர் பதவி என்பது நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற விவகாரங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விட்டுக்கொடுக்காத பாஜக - ஜேடியூ

சட்டசபையில் சர்வ அதிகாரமும் சபாநாயகருக்கே இருப்பதால் இந்த பதவியை தங்கள் வசம் வைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் கூட்டணியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் கடிவாளம் நம் பக்கம் இருக்கும் என இரு கட்சிகளுமே நினைப்பதால், இந்த பதவியை விட்டுக்கொடுக்க இருவருமே தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதுதவிர சில முக்கியமான துறைகளையும் இரு கட்சிகளுமே கண் வைத்து இருப்பதால் அமைச்சரவையை இறுதி செய்வதிலும் தாமதம் நிலவுகிறது என்று சொல்லபடுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பீகார் பாஜக மூத்த தலைவர்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார், மற்றும் லலான் சிங் டெல்லிக்கு இன்று இரவு வருகை தர இருப்பதாக பீகார் வட்டாரங்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+