பீகாரில் ஜனாதிபதி ஆட்சி? நெருங்கும் தேர்தலுக்கு நடுவே நிதிஷ் குமாருக்கு பாஜக செக்! பரபரப்பு தகவல்
பாட்னா: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினால் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 124 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

அதிகபட்சமாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி 43 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் 19 இடங்களிலும், சிபிஐ (எம்எல்) எல் கட்சி 12 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐசி 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதுதவிர பிற கட்சிகளும் மீதமுள்ள இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கியதால் நிதிஷ் குமார் முதல்வரானார். பாஜகவின் 74 எம்எல்ஏக்கள், ஜேடியூவின் 43 எம்எல்ஏக்கள், விகாஷல் இன்சான் கட்சி மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் 8 எம்எல்ஏக்கள் உதவியுடன் 125 எம்எல்ஏக்களின் ஆதரவு நிதிஷ் குமாருக்கு இருந்தது.
அதன்பிறகு கடந்த 2022ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்தது. ஆர்ஜேடியின் 74 எம்எல்ஏக்கள், ஜேடியூவின் 43 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 19 எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்து முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார்.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் 43 எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் விரைவில் பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பீகாருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இப்படியான சூழலில் தான் தற்போது பாஜகவுக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. அதாவது நிதிஷ் குமார் இந்த முறையும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்ற தகவல் சென்றுள்ளது. நிதிஷ் குமார் அடிக்கடி தேர்தலில் கூட்டணியை மாற்றி வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதோடு, எந்த கூட்டணிக்கு சென்றாலும் முதல்வர் பதவியை கெட்டியாக பிடித்து கொள்கிறார்.
இதனால் இந்த முறை நிதிஷ் குமாருக்கு பாடம் புகட்ட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விரைவில் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது நிதிஷ் குமார் பாஜக மேலிடம் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற பாஜக முடிவு செய்துள்ளதாம். அதுமட்டுமின்றி பாஜக வாபஸ் வாங்கும்போது காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சிகளும் ஆதரவு வழங்காது. ஏனென்றால் தேர்தல் காலம் நெருங்கிவிட்டது. இதனால் ஆட்சி என்பது கலையும்.
இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டு சட்டசபை தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி ஆட்சிக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம். ஏனென்றால் பீகாரில் தொடர்ந்து பாஜக கட்சி வளர்ந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2020 சட்டசபை தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பீகாரில் பாஜகவின் ஓட்டு சதவீதம் மற்றும் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் அதனை பயன்படுத்தி கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
இதனால் இந்த முறை நிதிஷ் குமார் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கம்பி நீட்டி வெளியேறினால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து அவருக்கு பாடம் புகட்ட பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப தான் சமீபத்தில் பீகாரில் ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார். கேரளா ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பீகார் ஆளுநராக இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் பீகார் ஆளுநராக இருந்த விஸ்நவாத் அர்லேகர் கேரளாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications