ராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..!
பாட்னா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை மிஞ்சும் வகையில் பீகாரில் சீதாவுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் சூழலில் முதற்கட்ட தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிடும் சூழலில், அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் சீதாமர்ஹியில் உள்ள சீதா தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிராக் பாஸ்வான், சீதாதேவி பிறந்த இடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் பிரம்மாண்ட கோயில் எழுப்பப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை விட புராண நகரமான சீதாமர்ஹியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சீதா இல்லாமல் ராமர் இல்லை என்றும் அதனால் இதனை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை எனவும் சிராக் பாஸ்வான் கூறினார். மேலும், சீதாமர்ஹியையும் அயோத்தியையும் இணைக்கும் வகையில் புதிய பாதை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முடித்துள்ள சிராக் பாஸ்வான், ஆன்மிகத்தில் சற்று அதிகம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications