50 சீட்டில் சரிவு! பீகாரில் தேஜஸ்வியை பின்னுக்கு இழுத்த காங்கிரஸ்! திமுகவிற்கு தங்கம் மாதிரி சான்ஸ்
பாட்னா: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்க திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக உருவெடுத்து உள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற வியூகங்களை பயன்படுத்தி, திமுகவிடம் அதிக இடங்களை கேட்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் மற்றும் TVK இடையே கூட்டணி அமையலாம் என சமூக வலைத்தளங்களிலும், சில அரசியல் விமர்சகர்கள் மூலமாகவும் செய்திகள் பரவி வருகின்றன. காங்கிரஸ் - விஜய் பேசி வருகின்றனர்.. விஜய் ராகுல் காந்தியை சந்திக்க போகிறார்.. விரைவில் பேச்சுவார்த்தை நடக்க போகிறது.. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன, கடந்த 24 மணி நேரமாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டும் என்று இந்த செய்தியை பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிக இடங்களை கேட்கும் காங்கிரஸ்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்க திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக உருவெடுத்து உள்ளது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கடும் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவிடம் அதிக இடங்களை கேட்கும் திட்டத்தில் இருக் கிறது.
பீகாரில் காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக - ஜேடியூ கூட்டணி 136இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
வெற்றியை பறித்த காங்கிரஸ்
காங்கிரஸ் சுமார் 50 தொகுதிகளில் பின்தங்கியிருப்பது, மாநிலத்தில் காங்கிரஸின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. காங்கிரஸின் இந்த பலவீனமான செயல்பாடு அதன் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியின் வெற்றி வாய்ப்புகளையும் பாதித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸின் குறைந்த வெற்றி விகிதம் கூட்டணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டைக் குறைத்துவிட்டதாக ஆர்ஜேடி தலைவர்கள் பலர் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸின் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரிக்கையைத் தமிழ்நாடு திமுக தலைமை ஏற்க மறுக்கலாம்.
காங்கிரஸின் தற்போதைய தேர்தல் பலம், உட்கட்சி பூசல், காங்கிரசுக்கு அடிமட்ட பலம் இல்லாதது, மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லாதது ஆகிய காரணங்களால் இவ்வளவு அதிக இடங்களுக்கு காங்கிரஸ் தகுதி இல்லை என்று திமுக தலைவர்கள் உணர்கிறார்கள்.
காங்கிரஸ் தனது அடித்தள பலத்தை மேம்படுத்திய பின்னரே அதிக இடங்களைக் கேட்க வேண்டும் என்று கூறி, கடந்த தேர்தலைப் போலவே குறைவான இடங்களை வழங்க அவர்கள் முன்வரலாம்.
பீகாரில் காங்கிரஸின் பலவீனமான செயல்பாட்டிற்குப் பிறகு, 2026 தேர்தலுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications