எப்படி இப்படி? ஜன்னலில் ஊஞ்சலாடுறது யார் பாருங்க.. 1 கி.மீ. தொங்கிட்டாரு.. ரயில் பயணிகளின் செம மாஸ்
பாட்னா: திருடனுக்கு தேள் கொட்டுவதை போல என்பார்களே.. அதைவிட படுதுயரமான சம்பவம் ஒரு திருடனுக்கு இப்போது நேர்ந்துள்ளது..!!!
ஓட்டமெடுக்கும் ரயிலின் ஜன்னல் வழியே பயணியின் செல்போனை பறிக்க முயன்ற நபரை, சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு ஜன்னலில் தொங்க விட்ட களேபரம் பீகார் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

குற்ற சம்பவங்கள்: ரயில்களில் கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது..
குறிப்பாக இரவு நேரங்களில் ரயில்களில் கண்காணிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. எனினும், இரவு நேரங்களில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. குறிப்பாக, வடமாநிலங்களில் இந்த திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகம் என்று சொல்லப்படுவதுண்டு. இப்படித்தான், இப்போதும் ஒருவர் ரயிலில் திருட போயிருக்கிறார்.
காஸ்ட்லி செல்போன்: பீகார் மாநிலத்தின் பாகல்பூர் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பயணிகள் அனைவரும் ஏறிஅமர்ந்துவிட்ட நிலையில், ரயில் ஒன்று கிளம்ப தயாரானது.. அந்த நேரம் பார்த்து, மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியே கையை விட்டு, பயணி ஒருவரின் காஸ்ட்லி செல்போனை திருட முயன்றுள்ளார்.. ஆனால் அதற்குள் அந்த பயணி சுதாரித்து கொண்டார்... செல்போனை எடுக்க வந்த திருடனின் கைகளை கெட்டியாக இறுக்கி பிடித்துக் கொண்டார்..
இதை பார்த்ததுமே, அருகிலிருந்த பயணிகளும் உதவிக்கு ஓடிவந்தனர்.. இப்போது எல்லாரும் சேர்ந்து அந்த திருடனின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டார்கள்.. ரயிலும் கிளம்பிவிட்டது. இதனால், திருடனால் தப்பித்துகூட ஓட முடியவில்லை.. ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே தொங்கியபடியே வந்தார்..
போலீஸ் ஸ்டேஷன்: இப்படியே சுமார் 1 கிமீ தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.. அடுத்து ஸ்டேஷன் வந்ததுமே, திருடனை போலீஸாரிடம் ஒப்படைக்கலாம் என்று பயணிகளும் முடிவு செய்துவிட்டனர். இதனால், திருடனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. பயணிகள் கையை விட்டாலும் பிரச்சனை, இறுக்கி பிடித்தாலும் பிரச்சனை என்பதால், 1 கிமீ தூரத்துக்கு கதிகலங்கி போனார்..
போலீசில் சிக்கி தர்ம அடி வாங்குவதைவிட, கீழே விழுந்து மண்டையை உடைத்து கொண்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால், ஒருகட்டத்தில், பயணிகளிடமிருந்து தன்னுடைய கையை விடுவித்து கொள்ள முயன்றார்.. ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை.. எவ்வளவோ முயன்றும் அவரால் விடுபட முடியவில்லை.
திகில் காட்சி: பயணிகள் திருடனின் கையை கெட்டியாக பிடிக்க, திருடனோ அந்தரத்தில் தொங்கி கொண்டு வர, அப்படியே சினிமாவில் பார்ப்பது போலவே இந்த திகில் காட்சியை, ரயிலுக்குள்ளிருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர்..
Kalesh near Bhagalpur Bihar, a snatcher was snatching a passenger's phone from a moving train, but he could not succeed in it and the passenger caught the snatcher and carried him hanging for about a kilometer
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 17, 2024
pic.twitter.com/66wIJmzWjS
இப்படிப்பட்ட சூழலில், அந்த திருடரின் நண்பர்கள் எங்கிருந்தோ உதவிக்கு ஓடி வந்தார்கள்.. ரயிலின் வேகத்துக்கு இணையாக ஓடிவந்திருக்கிறார்கள்.. சிறிது நேரத்தில் ரயில் சிக்னலுக்காக வேகம் குறைந்தபோது, ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த தங்களது நண்பனின் உயிரை காப்பாற்றி, அழைத்து சென்றனர்...
விழிப்புணர்வு: இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், ஜன்னல் வழியாக, செல்போனை பறிக்க முயலும் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், ஜன்னலோர பயணிகள் தங்கள் செல்போனை பத்திரப்படுத்தவும் உதவும் வகையில், இந்த நிகழ்வின் வீடியோ சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
இதுபோலவே கடந்த 2022ம் வருடமும், பீகாரின் சாஹேப்பூர் கமால் ஸ்டேஷனில் இன்னொரு சம்பவம் நடந்தது.. இதேபோலவே, ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றிருந்தபோது ஜன்னல் வழியாக செல்போனை பறிக்க ஒரு நபர் முயன்றிருக்கிறார்.. இதேபோலவே, அவரையும் பயணிகள் கெட்டியாக பிடித்து கொண்டார்கள்.. இதே போலவே, சுமார் 10 கிமீ தொலைவுக்கு அந்த செல்போன் திருடர் ஜன்னலிலேயே தொங்கிக்கொண்டு வந்தார்.
ஒரே அழுகாச்சி: ஆனால், பயணிகள் இறுக்கி பிடித்ததில், அந்த நபருக்கு கைகளே முறிந்து போய்விட்டது.. வலி தாங்க முடியாமல், "ஓ"வென்று கதறி அழுதார்.. அதற்கு பிறகுதான், பயணிகள் அவரை விடுவித்திருந்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications