பீகார் வாக்காளர் சிறப்பு திருத்த பணி.. 52 லட்சம் பேர் அதிரடியாக நீக்கம்.. தேர்தல் ஆணையம் அப்டேட்
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி வரும் 25 ஆம் தேதி உடன் நிறைவு பெற உள்ளது. இதற்கிடையே தற்போது வரை வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரை பொறுத்தவரை மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (Special Intensive Revision - SIR) தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில், சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிமாநிலங்களில் உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்குவது, பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என்பது இந்தியா கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தடை விதிக்க மறுத்தது. அதுமட்டுமின்றி வாக்காளர் திருத்த பணிக்கு ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.
51 லட்சம் பெயர்கள் நீக்கம்
இதற்கிடையே, இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வாக்காளர் பட்டியலில் 51 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இதுவரை 18 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் பெயர் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, "ஆகஸ்ட் 1, 2025 முதல் செப்டம்பர் 1, 2025 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் பொதுவெளியில் விடப்படும். இதில் ஏதேனும் பெயர்கள் சேர்க்கவோ, நீக்கவோ வாய்ப்புகள் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications