முஸ்லிம் வாக்காளர்களை.. அதிக அளவில் நீக்கிய தேர்தல் ஆணையம்? நீதிமன்றத்தில் சொன்ன பதிலை பாருங்க!
டெல்லி: பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில், முஸ்லிம் வாக்காளர்கள் தான் அதிகம் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது, சுமார் 65 லட்சம் வாக்காளர் விடுபட்டிருந்தனர். அதாவது 2020ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தவர்களை விட, 2025ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களுக்கும் இடையில் 65 லட்சம் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன. எனவே விடுபட்ட பெயர்கள், புதியதாக சேர்க்கப்பட்ட பெயர்கள் என முழு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்ஷி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது. அதில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள்தான் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை மறுத்த தேர்தல் ஆணையம், "இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. கண்டிக்கத்தக்கது. இந்த அணுகுமுறை மதச்சார்புடையது" என்று கூறியிருக்கிறது. அதேபோல, தங்கள் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தில் எந்த வாக்காளரின் மதத் தகவலும் பதிவு செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. எனவே, வாக்காளர் நீக்கம் அல்லது சேர்த்தலில் மத ரீதியான பாரபட்சம் இருப்பதாகக் கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் ஆதாரமற்றது என்று அது குறிப்பிட்டது.
மேலும், "வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 25% பேரும், இறுதியாக நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களில் 34% பேரும் முஸ்லிம்கள் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பெயர் அங்கீகார மென்பொருளை அடிப்படையாகக் கொண்டது, அதன் துல்லியம் அல்லது பொருத்தம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. இந்த மதச்சார்புடைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது" என்றும் கூறியிருக்கிறது.
இதனையடுத்து பூஷனின் தரப்பில், திருத்தப்பட்ட முழு வாக்காளர் பட்டியலையும் வெளியிட கோரப்பட்டது. கோரிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்ப, "முழு பட்டியலையும் வெளியிடும் பணியில் இருக்கிறோம்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள், "அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை... அவர்கள் வெளியிடக் கடமைப்பட்டுள்ளனர்... நாங்கள் இந்த விஷயத்தை இன்னும் முடித்துவிடவில்லை" என்று கூறினர்.
மறுபுறம் பிரசாந்த் பூஷன், "வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் அதற்கான காரணங்களை ECI வெளியிட வேண்டும். வரைவுப் பட்டியலில் உள்ள, ஆனால் இறுதிப் பட்டியலில் இல்லாத புதிய நீக்கப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை அவர்கள் வெளியிடவில்லை. நாளை மற்றும் 20ஆம் தேதி இறுதிப் பட்டியலை முடக்கி விடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இறுதிப் பட்டியலை தங்கள் இணையதளத்தில் வெளியிடவில்லை. இது உடனடியாகச் செய்யப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமாக வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளுக்குள் புதியதாக வாக்களர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பது நிறுத்தப்படும். இதைத்தான் பூஷன் கூறியிருக்கிறார்.
ஆனால் முதல் கட்ட தேர்தலுக்குதான் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.17. இரண்டாம் கட்ட தேர்தலுக்கு, வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.20. எனவே இன்னும் நேரம் இருக்கிறது என்றும், அதற்குள் பட்டியலை தாக்கல் செய்வோம் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "அவர்கள் என்ன வெளியிடுகிறார்கள் என்று பார்ப்போம். இறுதிப் பட்டியல் யார் சேர்க்கப்பட்டனர், நீக்கப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டால், சில அச்சுப் பிழைகள் இருந்தாலும் யாதவ் சுட்டிக்காட்டியது போல்... ஒரு பொறுப்புள்ள அதிகார அமைப்பாக அவர்கள் இவற்றைக் கவனத்தில் கொண்டு சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருக்கின்றனர். இதனையடுத்து வழக்கு விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த சூழலில்தான் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் ஆதார் அட்டையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆவணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, சீமாஞ்சல் பகுதியிலிருக்கும் ஏராளமான மக்களுக்கு வாக்குறுமை மறுக்கப்பட்டது. சீமாஞ்சல் பகுதி என்பது, வங்கதேசத்தில் எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications